புதன், 14 ஏப்ரல், 2021

இலங்கையில் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை! இந்தியாவில் பலத்த பாதுகாப்பு

 ஐ பி சி தமிழ் : இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை! இந்தியாவில் பலத்த பாதுகாப்பு
இலங்கை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கு தடைவிதித்துள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்,
அடிப்படை வாதிகள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயலக்கூடும் என்ற தகவல்களை தொடர்ந்து தமிழ்நாட்டின் விமானநிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படைவாதிகள் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்குள் படகு மூலம் நுழைவதற்கும் மறைந்துவாழ்வதற்கும் முயலக்கூடும்,இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு திட்டமிடக்கூடும் என்ற அச்சம் காணப்படுவதாக இந்து நாளிதழின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: