சனி, 17 ஏப்ரல், 2021

கொரோனா - தமிழகம் குஜராத் மாதிரி ஆக வாய்ப்பு உள்ளது ! மருந்து, மருத்துவர்கள், மருத்துவ மனை, வாக்சின் தட்டுப்பாடு!

இன்னும் எட்டு வாரத்துல இப்ப உள்ள குஜராத் மாதிரி ஆக வாய்ப்பு உள்ளது அதற்கு 4 முக்கிய காரணங்கள்.. 1) மருந்து தட்டுப்பாடு 2)வாக்சின் தட்டுப்பாடு 3) இடம் பற்றாக்குறை 4) மருத்துவர்கள் பற்றாக்குறை Be safe னு சொல்லுறது பார்மாலிட்டி தான்
May be an image of 1 person and standing

வெங்கடேஷ் ஆறுமுகம்  : 5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னும் மீண்டும் எனது சிடி ஸ்கேனில் இன்று 20% கொரோனா தொற்று உறுதி!
தற்போது இந்தியாவில் பரவும் இரண்டாவது கொரோனா அலை Double mutant virus எனப்படுகிறது! ஒரு நாளில் இரண்டு லட்சம் கோவிட் நோயாளிகள் இந்தியாவில் உருவாவதற்கு இந்த புதிய கொரானா வைரஸ் B 1617 தான் காரணம். இந்த mutation உலகில் வேறெங்கும் இல்லை.
இது dangerous virus என்பதற்கான எல்லா தகுதியும் பெற்றது என கண்டறிந்துள்ளனர். இதில் இரண்டு mutationகள் இருக்கும். அதாவது இரண்டு இடங்களில் E 484 Q மற்றும் L 452 R, மரபணு மாற்றம் ஆகி இருக்கும்.
இந்த மரபணு மாற்றம் என்ன செய்யுமெனில் இந்த வைரஸ் சுற்றி இருக்கும் ஊசி போன்ற இடங்களை இன்னும் கூர்மையாக்கும். இதனால் இந்த வைரஸ் எளிதாக உடம்பில் உள்ள செல்களில் ஊடுருவி செல்லும் தன்மையை பெறுகிறது. ஏற்கனவே இந்த வைரஸ்க்கு எதிர்க்க நம் உடலில் உருவாகி இருக்கும் எதிர்ப்பு சக்தி உள்ள செல்களில் கூட ஊடுருவி அதுலேயே பல்கி பெருகி அதையும் அழிக்கும் வாய்ப்பு பெற்றது.
பழைய கொரானாவுக்கு ம் இந்த கொரானாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதனால இது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்?
1) இது air borne; வீசும் காற்றில் கலந்து இருக்கிறது. ஒருவர் எதிரே இருந்து தும்மினால் தான் கொரானா வர வேண்டும் என்று இல்லை. பழசு droplet infections. தும்மும் போது வருவது
2) இதுக்கு அறிகுறிகள் ரெண்டு முதல் ஐந்து நாட்களில் ஆரம்பம் ஆகிறது . பழைய கொரானாவில் 7-15 நாட்கள் ஆகும்.
3) இதுல தொண்டை வலி காய்ச்சல் வயிறு பிரச்சனை தோள் பட்டை வலி ன்னு வித்தியாசமான அறிகுறிகள் அதிகமா தென்படுகிறது. பழசுல இருமல் மற்றும் நுரையீரல் பிரச்சனை தான் முக்கியமானது.
4) Ramedesvir அறிகுறி ஆரம்பித்த 3-7 நாளைக்கு போடணும்னு சொல்லி இருக்காங்க. பழசுல வேற எந்த மருந்தும் வேலை செய்யலனா இது ஆரம்பிக்கணும்னு சொல்லி இருந்தாங்க.
5) இப்ப இருக்கிற RT PCR / Antibody test எதுவும் இந்த புது கொரானாவ கண்டுபிடிக்கிறதுல சிரமங்கள் இருக்கிறது அதனால ஸ்வாப் நெகடிவ்னு அலட்சியம் வேணாம்.
6) CT scan ல finding ஒரு வாரம் கழித்து தான் வரும். அதனால காய்ச்சல் வந்ததும் சிடி ஸ்கேன் நார்மல் னு இருக்குனு அலட்சியம் வேண்டாம்.
7) இரத்தம் உறைதல் தடுக்கும் மருந்து இரத்தத்தில் நோய் சிவியரா இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கணும். நுரையீரல் பிரச்சனை வந்த பிறகு கண்டிப்பா கொடுக்கணும்.
8} முதல் அஞ்சு நாட்கள் தாண்டி காய்ச்சல் இருமல் சளி இருக்கும் நபர்களுக்கு அடுத்த பதினான்கு நாட்கள் தொடர் கவனிப்பு வேணும். ஆக்சிஜன் அளவு இரண்டாம் வாரத்தில் குறைய வாய்ப்புகள் அதிகம்.
9} 14 நாட்கள் தாண்டி ஒன்னும் பிரச்சினை வரலனாலும் இந்த எபெக்ட் குறைய மூணு மாசம் மாத்திரை சாப்பிடணும்.
ஆனால் நம்ம ஊர்ல இந்த நாட்கள் கணக்கு சரியா இல்லைங்கிறாதால எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்கிறதுனு குழப்பம் இருக்கு.
10) இது வீட்டில் பத்திரமா உள்ளவங்களை தான் முதல்ல தாக்குது. வெளியே போயிட்டு வர்றவங்களும் பத்திரமா இருங்க
11) பழைய கொரானா வயதானவர்கள் முதியவர்கள் தான் பிரச்சனைனு பேசுனோம். இந்த கொரானா இளம் சிறார்கள் adolescent தான் அதிகமா பாதிக்குது. அதனால வயது வித்தியாசம் ஆண் பெண் வித்யாசம் எல்லாம் இந்த புது வைரஸ்க்கு தெரியாது.
நம்ம ஊர்ல இன்னும் ஆராய்ச்சிகள் வெளியே வரல.
வழக்கம் போல கேரளா தான் இந்த தடவையும் சீக்கிரம் மற்றும் தீவிர பாதிப்புக்கு போகுது. கூடவே தமிழ் நாடு போக வாய்ப்பு உள்ளது. இந்த variant க்கு தனியாக..
RT PCR vaccine anti viral drug எதுவும் இல்லை
அதனால இது புது நோய் அப்படினு தான் நினைச்சு வைத்தியம் பார்க்கனும்
உண்மையில் இப்ப தான் நிசமான புலி வருது இத்தனை நாள் லாக் டவுன் போட்டது எல்லாம் இந்த புலி க்காக தான்.
இன்னும் எட்டு வாரத்துல இப்ப உள்ள குஜராத் மாதிரி ஆக வாய்ப்பு உள்ளது அதற்கு 4 முக்கிய காரணங்கள்..
1) மருந்து தட்டுப்பாடு
2)வாக்சின் தட்டுப்பாடு
3) இடம் பற்றாக்குறை
4) மருத்துவர்கள் பற்றாக்குறை
Be safe னு சொல்லுறது பார்மாலிட்டி தான். அது சொல்லாம கடைப்பிடிக்கிறது தான் நல்லது. Test positivity rate சென்னை க்கு 16 % ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து இருக்கிறது. வழக்கமா 3% க்கு கீழே இருக்கணும்.
இருந்தா நாம நோய் கட்டுக்குள் வச்சு இருக்கோம்னு அர்த்தம். திடீர்னு மூன்றுல இருந்து பதினைந்தா ஒரு மாசத்துல உயர்வது அந்த இடத்தில் நோய் அறிகுறிகளோட ஆட்கள் அதிகமாகி இருக்காங்க என்பது காட்டும்.
இது இருபது க்கு மேல போகும் பட்சத்தில் நாம uncontrollable state போயிட்டோம்னு அர்த்தம். நிலைமை கை மீறி போயிச்சு அர்த்தம் இப்ப ஏற ஆரம்பிச்சு இருக்கும் கிராப் பீக் தொட எட்டு வாரங்கள் ஆகும்.
இப்பவே முதல் படியில் இருக்கும் போதே இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் புதிய நோயாளிகள் வர்றாங்க. பீக் அப்ப இது பதினாறு மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
அடுத்து என்ன செய்யலாம்?என்று நண்பர்கள் கேட்ட போது தோன்றியது “போர்க்களத்துல நிக்குறோம். உள்ள போய் வெளியே வந்து தான் ஆகணும். காலரா ஊசி போட்ட மாதிரி தெருவுல இறங்கி தடுப்பூசிகளை அரசாங்கம் போடணும்.
நோயோட தன்மைகள் சொல்லி தீவிர நோயாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சி எல்லாருக்கும் சொல்லித் தரணும். மினி கிளினிக் முழுவதும் கோவிட் ட்ரீட்மெண்ட் சென்டரா மாத்தி தெருவுக்குத் தெரு..
கணக்கு எடுக்கணும். உடனடியாக வைத்தியம் செய்யணும். கோவிட் மருத்துவம் முழுவதும் அரசாங்கம் கையில் எடுக்கணும்.
ஒரே மருந்துகள் அரசாங்கம் மூலம் எல்லாருக்கும் இலவசமா வரணும். அப்ப தான் தகுதியானவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்கும்.
போர்க்கால அடிப்படையில் எல்லா வேலைகளையும் நிப்பாட்டி முழு கவனமும் கோவிட் மேல அடுத்த மூணு மாசம் வைக்கனும். செப்டம்பர் வரை இந்த வேவ் இருக்கும்
இந்த அரசாங்கம் முதல்ல அதிகாரிகள் பேச்சு கேட்கிறது கூட சேர்ந்து மருத்துவர்கள் பேச்சு கேட்க ஆரம்பிக்கணும்.
பொது மக்கள் அரசாங்கம் சொல்லுறதைக் கேட்க ஆரம்பிக்கணும் முழு ஒத்துழைப்பு கொடுக்கனும்.
இதை தடுக்க நம்ம கிட்ட இருக்கும் ஓரே ஆயுதம்
1) மாஸ்க் போடுறது
2) கைகளை கழுவுறது
3) சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறது
4)அவசியம் இல்லாத வெளியே வராமல் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது
5) முடிந்த அளவு கொரானா பற்றி பேசுவது, பாதித்த நபர்களுக்கு உதவுவது. (நன்றி மருத்துவர் சில்வியா ப்ளாத்)
நான் ஒரு போதும் கலங்க மாட்டேன்! என் மனவுறுதியுடன் மோடி பார்த்துக் கொள்ளாவிட்டாலும் இந்தக் கொரோனாவை நான் மோதிப் பார்த்துவிடுகிறேன்!

கருத்துகள் இல்லை: