சனி, 17 ஏப்ரல், 2021

நடிகர் விவேக் காலமானார்

tamil.oneindia.com : சென்னை: மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார்.
அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். வெள்ளிக்கிழமை காலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்
விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது.     
அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ரசிகர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைப்பவர்.
சினிமாவில் நடிப்பது தவிர மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார் விவேக். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரைத்துறை பிரபலங்களும் அவரது ரசிகர்களும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கருத்துகள் இல்லை: