புதன், 27 மே, 2020

பெரோஸ்காந்தி !.. குஜராத்தி முதலைகளை அன்றே தோலுரித்த இந்திரா காந்தியின் கணவர்


Raja M Raja : அதாவது சுதந்திரம் வாங்குனதும் நேருவோட மந்திரிசபை அமையுது...
அப்ப இன்னா பன்றானுகன்னா இந்த குஜராத்தி ராஜஸ்தானியெல்லாம் தங்களுக்காக அமைக்கப்பட்ட இந்த தேசத்தை பணத்தை பெருக்க யூஸ் பன்ன ஆரம்பிச்சானுக..
அதாவது மொதல் வேலையா ஷேர்மார்க்கெட்ல விளையாட ஆரம்பிச்சானுக..
அதுல மொத ஆளு யாருன்னா ராதாகிஷன்னு ஒரு ஜெயின் அவரு என்ன பன்னாருன்னா பென்னட் கோல்மன்னு ஒரு ஷேர் புரோக்கரிங்க் கம்பெனிய வச்சு மணி லாண்டரிங்க் விளையாட ஆரம்பிச்சாரு...

கரெக்டா அவனுக்கு ஆப்பு வச்சாரு ஒரு ஹானஸ்ட் எம்பி..
அவரது ஊழலையெல்லாம் புட்டு புட்டு வச்சு தம்பி இங்க வாலாட்டாத ஒட்ட நறுக்கிருவேன்னு அத்தாந்தண்டி பிஸ்னஸ் மேக்னட்டை தூக்கி உள்ள வச்சான் அந்த எம்பி..
அப்புடி என்ன அந்த குஜராத்தி ராதாகிஷன் அவ்வளவு பெரிய ஆளான்னு கேக்குறீங்களா..
அவர் முழு பேரு ராதாகிஷன் டால்மியா..
ஆமாங்க இன்னைக்கு இந்தியாவையே கையில் வைத்திருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா க்ருப்போட ஓனரு டால்மியா சிமெண்ட் டால்மியாதான் அவரு..
இன்னிக்கும் இந்திய மக்கள் எந்த செய்தியை பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உலகிலேயே அதிகமான விற்பனையாகும் டைம்ஸ் ஆப் இன்டியாவின் ஓனரேதான்..

அடுத்து ஹரிதாஷ் முந்த்ரான்னு ஒரு ஷேர்மார்கெட் டான் நம்ம எல்ஐசி ல உள்ள ஷேர்ல கொள்ளையடிச்சு சுமாரா ஒன்னேகால்கோடி ஆட்டையப் போட்டாரு இப்போதைய மதிப்புக்கு 500 கோடி..
திரும்ப அதே எம்பி அந்தாளை புடிச்சு கிழிகிழின்னு கிழிச்சு ஊழலை நாறடிச்சு 22வருசம் ஜெயில்தண்டனை வாங்கி குடுத்துட்டுதான் ஓஞ்சாரு...
அந்த கேஷ்ல இன்னொரு கறுப்பு ஆடும் மாட்டுனுச்சு அது வேற யாருமில்லை நம்ம மதராசி டிடி கிருஷ்ணமாச்சாரியார்..
அவர்தான் அப்போதைய இந்தியாவின் பைனான்ஸ் மினிஸ்டர் அவர்தான் முந்த்ராவுக்கு கொள்ளையடிக்க உதவியா இருந்து அசிங்கப்பட்டு கடைசில பைனான்ஸ் மினிஸ்டர் பதவியயே ராஜினாமா பன்னிட்டாரு..
அதையும் போட்டுத்தாக்குனது நம்ம அதே ஹானஸ்ட் எம்பி..தான்
அந்த கிருஷ்ணமாச்சாரி வேறு யாருமில்லை இன்னிக்கு மருந்து தொழில் காண்டம் தொழிலில் உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் டிடிகே ஓனர்தான்..
நேருவுடைய கவர்மெண்ட்டே அந்த ஹானஸ்ட் எம்பியால அள்ளு விட்டுச்சு குஜராத்தி மார்வாரி பார்சியெல்லாம் யார்ரா இவன் பெரிய ஏழரையா இருக்கான்னு கையப் பிசைய..
நம்மாளு ஹானஸ்ட்டு கடைசியா வச்சான் பாரு ஆப்பு டாடாவுக்கு..
டாடா என்ன பன்னாருன்னா ஜப்பான்லேருந்து இறக்குன ரயில் என்ஜினுக்கு டபுள் சார்ஜ் போட்டு இந்திய அரசாங்கத்தை மொட்டயடிச்சுருக்காரு..
அதையும் நம்ம ஹானஸ்ட்டு கழுத்துப்புடியா புடிச்சு அறிவிப்பு ஒன்னு வெளியிட்டாரு..
டாடா அரசுடமையாக்கப்படும்னு..
அம்புட்டுத்தான் டாடா கதற ஆரம்பிச்சிட்டாரு நம்ம எம்பி கால்ல விழுந்து நீயும் பார்சி நானும் பார்சி விட்டுடா அம்பின்னு கதற..
பார்சியாவது பாமாயிலாவது ஒழுங்கா இருந்தா இரு இல்லேனா அள்ளிக்கட்டிட்டு நாட்டை விட்டு ஓடிப்போயிருனு வெரட்டிக்கூடிட்டான்...
இவ்வாறாக குஜராத்தி மார்வாடிகளை இந்த நாட்டை கபளீகரம் செய்யவிடாமல் அரணாக காத்து நின்ற மாவீரன் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார்...
ஒரு வல்லரசாக உருவாக வேண்டிய இந்தியா அந்த தங்க மகனை இழந்தது...
அவர் வேறு யாருமில்லைங்க நமது இந்திராகாந்தியின் கணவர் பெரோஸ்காந்திதான்..
ஒடனே அவரைப் பத்தி சுகவாசிமாதிரிஎதையாவது அள்ளிவிடுவானுக....
ஆனால்
அவர் ப்யூர் பார்சி..
முழு பெயர் ஃபெரோஸ்கான் சாண்டி...
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர்..
அவரை மறைத்து விட்டார்கள் இந்த குஜராத்திகள்.. ஏன்னா அவனுக வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறிரும்னேன்..

கருத்துகள் இல்லை: