சனி, 30 மே, 2020

ஆர்.எஸ்.பாரதி பிணையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

rs bharathi interim bail, dmk mp rs bharathi chennai high court oreder, madras high court order, ஆர்.எஸ். பாரதியின் ஜாமீன் மனு ரத்து செய்ய மறுப்பு, ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றம், திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, not cancel interim bail of rs bharathi, sc st atorocity prevention act, latest tamil news, latest tamil nadu news, latest news in tamil/tamil.indianexpress.com: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட  பிணையை நீக்கி உத்தரவிட மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்!
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், நடத்தப்பட்ட கருத்தரங்கில், ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 23-ம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31-ம் தேதி வரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடவும் கோரினார்.
ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்ட பிச்சை என்பது பிச்சை எடுப்பதை குறிக்காது என சுட்டிக்காட்டினார்.
புகார்தாரரை விசாரிக்காமல் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படியானதாக இல்லாத முன் ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டார்.
சங்க கால இலக்கியங்களில் பிச்சை என்பது பிச்சை எடுப்பதையே குறிப்பதாக, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார் , இரு மனுக்கள் மீதான தீர்ப்புகளை இன்று அளிப்பாக தெரிவித்தார்.
இதனிடையே இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நீர்மல்குமார் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்துவிட்டார். இடைக்கால ஜாமீன் அளித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் ( சென்னை முதன்மைஅமர்வு) ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தில் அவரின் ஜாமீன் மனுவை பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதி நீர்மல்குமார் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: