சனி, 30 மே, 2020

தமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள் அமேசானுக்கு அழைப்பு

தமிழகத்தில்  தொழில் தொடங்க ஆப்பிள் அமேசானுக்கு அழைப்பு!
கண்டிசன்  : 40 வீத கமிசன்
மின்னம்பலம்: உலக அளவில் பிரபல தொழில் நிறுவனங்களான ஆப்பிள் , அமேசான் நிறுவனங்களைத் தமிழகத்திலும் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சிறப்புப் பணிக்குழு தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், மே 27 ஆம் தேதி, சுமார் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கையெழுத்தானது.

இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க, ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிம் குன் சுக், அமேசான் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜெப் பெசாஸ், எச்.பி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் என்ரிக், உள்ளிட்ட 13 முன்னணி மின்னணுவியல் நிறுவனங்களின் தலைவர்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்திட அழைப்பு விடுத்து முதல்வர் நேற்று (மே 29) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: