திங்கள், 25 மே, 2020

நீதிபதி கர்ணன் அவமான படுத்த பட்டபோது எங்கே போனார்கள் நடு நிலமையாளர்கள்?

Kannan Thiagarajan : இப்போ வாய்த்தவறி தாழ்த்தப்பட்டோரை நடத்துவது போல் எங்களை தலைமைச் செயலர் நடத்தினார்,என தயாநிதி சொன்னது சட்டப்படி குற்றம் எனச்சொல்லும் திருமா, 
அதே இனத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணனை பார்ப்பன நீதிபதிகள் அவமானப்படுத்திய போது , இந்த நபர் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற ஐயம் இருக்கிறது என உச்சநீதிமன்றம் சொன்னபோது கர்ணனின் நிலைக்கு ஆதரவாக எத்தனை பட்டியலின மக்கள் கொதித்தெழுந்தினர். ?
திமுக காரன் நாங்கள் அந்த இனத்திற்கு எப்படிப்பட்ட நன்மைகளை யெல்லாம் செய்திருக்கிறோம் என பெருமைப்படுத்திய
பாரதி மீது வழக்கு போட்டதை ஆதரிக்கும்" சிந்தனையாளர்கள்"!!?? 

இப்போது பட்டியலின் மக்கள் களை என்னவென்று அழைப்பது? தலித்தென்றா? 
ஹரிஜன் என்றா? 
திருமா வளவன் தலித் என அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகிறாரே,ஆனால் அவரே தலித் என அழைப்பதை 2 ஆண்டுகளுக்குமுன் எதிர்த்தாரே? எது சரி; எது தவறு? ஒரு முடிவு தெரிந்தால் வேண்டும்! 

/tamil.samayam.com : நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையிலிருந்துவிடுதலை.! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதமாக சிறைத்தண்டனை அனுபவித்த முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையிலிருந்து இன்று விடுதலையானார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தொடுத்து வந்தார். மற்ற நீதிபதிகள் பற்றி தொடர்ந்து அவதூறாக கருத்து கூறி வந்ததால், உச்ச நீதிமன்றம் அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து ஆறுமாத சிறைதண்டனையும் விதித்தது.
அதன்பிறகு தலைமறைவான கர்ணன், கோவையில் கைதுசெய்யப்பட்டு கொல்கத்தா பிரெசிடென்ஸி சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
 கடந்த 6 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் தண்டனை காலம் முடிந்து இன்று கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை: