செவ்வாய், 26 மே, 2020

கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்


தினமலர் :இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது

விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது. இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: