ஞாயிறு, 24 மே, 2020

மம்தா ஆவேசம் என் தலையை துண்டித்துவிடுங்கள்.. புயல் பாதிப்பால் மக்கள் போராட்டம்

புயல் பாதிப்பால் மக்கள் போராட்டம் - என் தலையை துண்டித்துவிடுங்கள் : மம்தா ஆவேசம்ஆம்பன் புயல் பாதிப்பு மாலைமலர் : ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் என்று மம்தா ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களுக்கு இன்னும் மின்சாரம் வரவில்லை. குடிநீர் சப்ளை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. இதன் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது, முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது சம்பந்தமாக நிருபர்களிடம் கூறும்போது, புயல் தாக்கி 2 நாட்கள் ஆகி உள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


நாங்கள் அனைவரும் இரவு- பகல் பாராமல் இதற்காக உழைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லா பணிகளும் விரைவில் முடிந்து விடும். இதற்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.

அதையும் மீறி போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் என்று கூறினார்

கருத்துகள் இல்லை: