சனி, 30 மே, 2020

பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவனை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகத்தர்


Meronews.Lk : பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்? தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட மறுத்த 18 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்,
பாகிஸ்தானின்  பஞ்சாப் மாகாண நெடுஞ்சாலை ரோந்துச் சேவை உத்தியோகத்தர் ஒருவரையே குதியான் நகர பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குதியான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குதியான் பஸாரில் வைத்து செவ்வாயன்று சுட்டுக்கொல்லப்பட்ட அந்த சிறுவன், உள்ளூர் பிரார்த்தனைத் தலைவர் ஒருவரின் மகனாவார். பிரார்த்தனை தலைவரினாலேயே இந்த சம்பவம் தொடர்பான முதலாவது முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளதுஇந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்து, மாகாண பொலிஸ் மா அதிபரிடமிருந்து இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் மாகாண முதலமைச்சர் உஸ்மான் புஸ்டார் கோரினார்.

சிறுவனை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர், நீதி பெற்றுத்தருவதாக உறுதி வழங்கினார்.
30 வயதான சந்தேக நபர் ரோந்து பொலிஸ் சேவையை சேர்ந்தவர் எனவும் தீபால்பூர் வீதியில் அமைந்துள்ள நூர்பூர் பொலிஸ் காவல் நிலையத்தில் சேவையாற்றிவந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்டவரும் சந்தேக நபரும் மிக நெருங்கிய நண்பர்கள் எனவும் கடந்த காலங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் தகாத உறவுகள் இருந்ததாகவும் பொலிஸ் நிலைய அதிகாரி மொஹமத் அஷ்ரவ் தெரிவித்தார்.
தனது மகன் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு நடந்து போய்கொண்டிருக்கையில் ஒரு சந்து மூலையில் சந்தேக நபரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கொல்லப்பட்டவரின் தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சிறுவனை துப்பாக்கி முனையில் மிரட்டிய சந்தேக நபர், தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட ஒப்புக்கொள்ள மறுத்தால் கொலை செய்வதாகவும் எச்;சரித்ததாக முறைப்பாட்லெ் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தேக நபரின் இச்சைக்கு உடன்பட சிறுவன் மறுத்ததால் ரோந்துசேவை பொலிஸ்காரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சிறுவனை சரமாரியாக சுட்டுள்ளார். இதன் காரணமாக சிறுவன் படுகாயமடைந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்துள்ள முறைப்பாட்டாளர், அங்கிருந்த மற்றையவர்களுடன் சேர்ந்து சந்தேக நபரைப் பிடிக்க முயற்சித்த போதிலும் சந்தேக நபர் துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தியவாறு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக கசூர் மாவட்ட தலைமையக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவரை லாகூர் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மிக மோசமான நிலையிலிருந்த அந்த சிறுவன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் இடம்பெற்ற சொற்ப நேரத்தில் சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார், பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ள விபரங்களுக்கு அப்பால் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி நியாயம் பெற்றுக்கொடுப்பர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: