ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கொஞ்சம் இறைச்சி, அதிக காய்கறிகள்: புவியைக் காக்க பரிந்துரைக்கப்படும் புதிய உணவுகள்

BBC : பூமிக்குப் பேரழிவான
பாதிப்பு ஏதும் இல்லாமல் ஆயிரம் கோடி பேருக்கு
உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு உணவுப் பழக்கம் உருவாக்கப் பட்டுள்ளது. வரக்கூடிய தசாப்தங்களில் கோடிக்கணக்கான கூடுதல் மக்கள் தொகைக்கு எப்படி உணவிடப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை காண்பதில் அறிவியல் நிபுணர்கள் முயற்சிகள் செய்து வருகிறார்கள்.
``புவிசார்ந்த ஆரோக்கியத்துக்கான உணவுப் பழக்கம்'' - என்று அவர்கள் கூறியுள்ள விடை - மாமிசம் மற்றும் பால் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிப்பதாக இல்லை.
ஆனால், நமது உணவுத் தட்டுகளில் பெருமளவில் குவித்து வைக்கும்
உணவுப் பொருள்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மாற்றம் செய்து குறைவாக சாப்பிடும் உணவுப் பொருள்களைப் பரிந்துரை செய்வதாக அது இருக்கிறது. நான் என்ன மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கும்?
நீங்கள் தினமும் மாமிசம் சாப்பிடுபவராக இருந்தால், இதுதான் முதலாவது எச்சரிக்கை. சிவப்பு மாமிசத்துக்கு (மாட்டிறைச்சி) வாரத்தில் ஒரு பர்கர் அல்லது மாதத்துக்கு ஒரு பெரிய இறைச்சித் துண்டு என்பதுதான் உங்களுக்கான அளவாக இருக்கும். வாரத்திற்கு சிறிதளவு மீன் மற்றும் அதே அளவு சிக்கன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கான புரதச்சத்தின் மீதி பகுதி தாவரங்களில் இருந்துதான் வர வேண்டும்.

இதற்குப் பதிலாக பயிர் வகைகள் மற்றும் பீன்ஸ், சுண்டல், அவரை போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
நாம் சாப்பிடும் உணவில் பாதியளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும் என்பது முக்கியத்துவம் பெறும்.
ஆப்பிரிக்காவில் அதிக அளவில் உண்ணப்படும் உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கு போன்ற ``மாவுச்சத்து மிகுந்த காய்கறிகளுக்கு'' தவறான தடை இருந்தபோதிலும் இந்த யோசனை முன்வைக்கப் படுகிறது.

அப்படியானால் உணவுப் பட்டியலின் விவரம் என்ன?

எல்லாவற்றையும் சேர்த்தால் ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படுபவை பின்வருமாறு இருக்கும்:


1. பயிர் வகைகள் - தினம் 50 கிராம்
2.பீன்ஸ், சுண்டல், அவரை மற்றும் இதர விதை வகை உணவுகள் - தினம் 75 கிராம்
3.மீன் - ஒரு நாளுக்கு 28 கிராம்
4.முட்டை - ஒரு நாளுக்கு 13 கிராம் (அதாவது ஒரு வாரத்துக்கு ஒரு முட்டைக்கும் சிறிது அதிகம்)
5.மாமிசம் - ஒரு நாளுக்கு 14 கிராம் மாட்டிறைச்சி மற்றும் ஒரு நாளுக்கு 29 கிராம் சிக்கன்
6.மாவுச்சத்து - ரொட்டி மற்றும் அரிசி போன்ற முழு தானியம் ஒரு நாளுக்கு 232 கிராம் மற்றும் மாவுச்சத்துள்ள காய்கறிகள் ஒரு நாளுக்கு 50 கிராம்
7.பால் பொருட்கள் - 250 கிராம் - ஒரு டம்ளர் பாலுக்கு இணையானது
8.காய்கறிகள் (300 கிராம்) மற்றும் பழங்கள் (200 கிராம்)
உணவுப் பட்டியலில் 31 கிராம் சர்க்கரை மற்றும் 50 கிராம் அளவுக்கு ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம்.

அதன் ருசி மோசமானதாக இருக்குமா?

மோசமாக இருக்காது என்று ஹார்வர்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் வால்ட்டர் வில்லெட் கூறுகிறார். சிறு வயதில் பண்ணையில் இருந்தபோது தினமும் முக்கால்வாசி உணவாக சிவப்பு மாமிசம் சாப்பிட்டு வந்த நிலையில், இப்போது புவிசார்ந்த ஆரோக்கிய உணவு முறைக்கு நன்கு பழகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.
``இதில் நிறைய வகைகள் இருக்கின்றன'' என்று அவர் சொல்கிறார்.
``அந்த உணவுகளை எடுத்து வெவ்வேறான ஆயிரம் வகைகளாக ஆக்கிக்கொள்ள முடியும். உணவை மறுக்கும் பட்டியலை நாம் தரவில்லை. இது ஆரோக்கியத்தை தரும் உணவுப் பட்டியல், மாற்றிக் கொள்ளக் கூடியது மற்றும் அனுபவித்து சாப்பிடக் கூடியது'' எனஅறு அவர் கூறுகிறார்.




இது உண்மை வாழ்க்கைக்கா அல்லது வெறும் கற்பனைக்கா?

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது இந்தத் திட்டம்.
ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் சிவப்பு மாமிசத்தின் தேவையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கிழக்கு ஆசியா மீன் தேவையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆப்பிரிக்காவில் மாவுச்சத்துள்ள காய்கறிகளை குறைக்க வேண்டும்.
``இவ்வளவு பெரிய அளவில், இந்த வேகத்தில் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு மனிதகுலம் ஒருபோதும் முயற்சி செய்தது இல்லை'' என்று ஸ்டாக்ஹோம் ரெசிலியன்ஸ் மையத்தின் உதவிப் பேராசிரியர் லைன் கோர்டன் கூறுகிறார்.
``இது கற்பனையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு கற்பனை மோசமானதாக இருக்க வேண்டும் என்று கிடையாது. நல்லதொரு உலகை உருவாக்குவதற்கு கனவு காணும் காலம் வந்துவிட்டது'' என்று அந்தப் பெண்மணி தெரிவித்தார்.
உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு, சிவப்பு மாமிசத்தின் மீது வரி விதிப்பது தேவையான ஒரு விஷயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதை யார் முன்மொழிந்தது?




உலகெங்கும் இருந்து 37 அறிவியல் நிபுணர்கள் EAT-Lancet கமிஷனின் அங்கமாக ஒன்று சேர்க்கப்பட்டனர்.
வேளாண்மை முதல் பருவநிலை மாற்றம், சத்துணவு என பல துறைகளைச் சேர்ந்த அவர்கள், இந்த முடிவுகளை எடுப்பதற்கு இரண்டு ஆண்டு காலம் ஆனது. இது Lancet-ல் வெளியிடப்பட்டது.

ஆயிரம் கோடி பேருக்கான உணவுப் பழக்கம் எதற்கு வேண்டும்?

2011ல் உலக மக்கள் தொகை 7 பில்லியனைத் தொட்டுவிட்டது.இப்போது 7.7 பில்லியனாக உள்ளது. 2050ல் இது 10 பில்லியனாக (ஆயிரம் கோடி) உயர்ந்து, அதிகரித்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உயிர்களைக் காப்பாறுமா?

இந்த உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் ஆண்டுதோறும் 11 மில்லியன் பேர் இறப்பதைத் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களால் வரும் பாதிப்புகள் இதில் பெருமளவு இருக்கிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் மிகப் பெரிய உயிர்க்கொல்லிகளாக இவை இப்போது இருக்கின்றன.




வீகன் டயட் என்றால் என்ன?

பூமிக்கு பண்ணைத் தொழில் எந்த அளவுக்கு கெடுதலாக உள்ளது?

உணவு மற்றும் காடுகளை உருவாக்கும் செயல்களுக்காக நிலங்களைப் பயன்படுத்துவதால், உலக பசுமைக்குடில் வாயுக்கள் உற்பத்தியில் கால் பாகம் அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மின்சாரம் மற்றும் சூடுபடுத்துதல் ஆகியவற்றின் அதே அளவு பாதிப்பு இது. ரயில்கள், விமானங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் பாதிப்பைவிட கணிசமான அளவுக்கு அதிகம் இது.
உணவுத் துறையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை உற்று நோக்கினால், மாமிசம் மற்றும் பால் பொருட்கள் முக்கிய பங்காற்றுவதைக் காணலாம். உலகெங்கும் மனிதர்களால் உருவாக்கப்படும் பசுமைக்குடில் பாதிப்பு வாயு உற்பத்தியில், கால்நடைகளால் ஏற்படும் பாதிப்பு 14.5 முதல் 18% வரை உள்ளது.
வெப்பமாக்கும் மற்ற வாயுக்களைப் பார்த்தால், மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்கள் உற்பத்தியில் விவசாயம் பெரியதொரு பங்காற்றுகிறது.
காற்று மாசுபாடு ஏற்படுவதில் விவசாயம் முக்கிய காரணமாக இருக்கிறது. விவசாயத்தில் உருவாகும் அம்மோனியா, நுண்ணிய துகள்களை உருவாக்குகிறது என்று, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உலகெங்கும் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அந்த அமைப்பு குறிப்பிடுகிறது.
அதேபோல தண்ணீரைப் பார்த்தால், விவசாயமும் உணவு உற்பத்தியும் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கின்றன. உலக அளவில் 70% தண்ணீர் பாசனத்துக்கு செலவிடப் படுகிறது.






    புவிசார்ந்த உணவுப் பட்டியல் பூமியைக் காப்பாற்றுமா?

    பின்வரும் அம்சங்களுடன் அதிகமானவர்களுக்கு உணவிடுவதை நோக்கமாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் திட்டங்களை முன்வைத்துள்ளனர்:
    •பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் பசுமைக்குடில் வாயு உற்பத்தியை குறைந்தபட்ச அளவுக்கு கொண்டு வருதல்
    •எந்த உயிரினமும் அழிந்துவிடாமல் தடுப்பது
    •விவசாய நிலம் மேலும் அதிகரிக்காமல் இருப்பது
    •தண்ணீரைப் பாதுகாப்பது
    இருந்தபோதிலும் உணவுப் பழக்கத்தை மாற்றுவது போதுமானதாக இருக்காது.
    அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு உணவளிக்க, உணவு வீணாவதை பாதியாகக் குறைப்பதும், இப்போதுள்ள விவசாய நிலங்களில் உற்பத்தியைப் பெருக்குவதும் தேவைப்படுகிறது.


      

    மாமிசத்துக்கு ஏன் தடை விதிக்கவில்லை?

    ``பசுமைக்குடில் வாயு உற்பத்தியை குறைந்தபட்ச அளவாக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கமாக இருந்தால், எல்லோரும் சமைக்காத உணவு முறைக்கு மாறும்படி நாம் கூறலாம்'' என்று பேராசிரியர் வில்லட் கூறுகிறார்.
    ஆனால் சமைக்காத உணவுகள் ஆரோக்கியமான உணவாக இருக்குமா என்று தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.

    இப்போது என்ன நடக்கிறது?

    EAT-Lancet கமிஷன் இந்தத் தகவல்களை உலகெங்கும் அரசுகளிடம் கொண்டு செல்லப் போகிறது. உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகளிடமும் கொண்டு செல்லப் போகிறது. நாம் சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் செய்ய முடியுமா என்று முயற்சிக்கப் போகிறது.

    கருத்துகள் இல்லை: