ஞாயிறு, 20 ஜனவரி, 2019

பாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய மாநில தேர்வுகள் , பாடத்தேர்வுகள் பெரிதும் மோசடி தேர்வுகளே ..

Palanivel Manickam : மத்திய பிரதேசத்தில் ஒரு மாவட்டத்தில் மாணவர்கள் கம்ப்யூட்டர் டிப்ளமோ தேர்வை எங்கு உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
வயல் வரப்பில் அருகருகே உட்கார்ந்து கொண்டு புத்தகம் மற்றும் பக்கத்தில் எழுதுபவரின் விடைத்தாளை பார்த்தும் ஆழ்ந்த அறிவுடன் அற்புதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை முறைகேடுகளும் தேர்வு கண்காணிப்பாளர்களின் எதிரிலேயே அரங்கேறுகிறது.
பாஜக 15 வருடங்களாக தொடர்ந்து ஆண்ட மாநிலத்தின் நிலை இதுதான்,முறைகேடுகளின் ஒட்டுமொத்த குத்தகையை பாஜக ஆளும் மாநிலங்கள் எடுத்திருக்கின்றன என்பது தான் சிறப்பான செய்தி....
இந்தியாவெங்கும் ஓரே கல்விமுறை,ஒரே தேர்வு,ஒரே கலாச்சார, பண்பாடு என கயிறு திரிக்கும் வேலையை காவிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதற்கான வேலைகளை தொடர்ச்சியாக செய்ய இந்தியாவின் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஊடுருவி இருக்கின்றன காவி சங்கிகள்...
இதில் தமிழகத்தில் இருக்கும் ஒன்றிரண்டு காவிகள் கல்வியில் முன்னேறி வரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தகுதி,தரத்தை ஆராய கிளம்பிவிடுவார்கள்.
ஆப் கி பார், வயல் வரப்பு சர்க்கார்....

கருத்துகள் இல்லை: