புதன், 23 ஜனவரி, 2019

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம்: தடை விதிக்கக் கோரிய வழக்கில் புதன்கிழமை விசாரணை

jacto protest, jacto geo protest, jacto geo protest today, jacto geo protest reason, protest in tamil nadu today, jacto geo protest in tamil nadu today, state government employees strike today, jactor protest live updates, ஜாக்டோ-ஜியோ போராட்டம், கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசு, ஆசிரியர்கள் போராட்டம்tamil.indianexpress.com :Strike: சில தொடக்கப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது
Association of State Government Employees in Tamil Nadu Calls for Strike Today: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்.
அதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் போராட்ட ஆயத்த மாநாட்டில், தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறி, கைவிடப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்க இருப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்று காலை 10.30 மணிக்கு ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
அதேசமயம், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த மாணவர் கோகுல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு வைத்துள்ளார். போராட்டம் நடைபெறும் சூழலில், நீதிமன்றத்தில் இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

ஜாக்டோ-ஜியோ போராட்டம்

15:30 PM – ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மாணவர் கோகுல் தரப்பில் முறையிடப்பட்டது. இதுதொடர்பான வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.
13:30 PM – பட்டுக்கோட்டையில் பூமல்லியார்குளம் நகராட்சி தொடக்கப்பள்ளி வெகுநேரமாக திறக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் காத்திருக்கின்றனர்.
12:45 PM – ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிராக ராசிபுரம் அருகே மாணவர்கள் போராட்டம். சுனவேலம்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உளப்பட 6 ஆசிரியர் வரவில்லை. பள்ளிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
12:15 PM – கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தால் 1200 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர் பள்ளிக்கு வந்து மாணவர்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றுவிட்டனர்.
11:35 AM – “மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்” என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11:30 AM – போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கக் கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த +1 மாணவர் கோகுல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று, அந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.
11:15 AM – வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கபட்டது. சில தொடக்கப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது.
11:00 AM – “ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அவமானப்படுத்துகின்றனர். நீதிமன்றம் மூலம் போராட்டத்தை முடக்க நினைக்கின்றனர். ஆனால் எந்தவித மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்” என ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில நிதி காப்பாளர் மோசஸ் தெரிவித்துள்ளார்.
10:45 AM – தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பு – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தகவல்.

கருத்துகள் இல்லை: