வியாழன், 24 ஜனவரி, 2019

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது - தேர்தல் ஆணையம் பதட்டத்தில் தினகரன்

மின்னம்பலம் : குக்கர் சின்ன வழக்கால் மீண்டும் டென்ஷனில் இருக்கிறார் தினகரன். குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி, டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் அமித் சர்மா, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத எந்தக் கட்சிக்கும் குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது. அந்த வகையில் டிடிவி தரப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்தார்.
அதற்கு "தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியவில்லையெனில், ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது" என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியபோது, “இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. எங்களிடம் 20 எம்.எல்.ஏக்களும், 6 எம்.பி.க்களும் உள்ளனர். (வழக்கு தாக்கல் ஆனபோது) ஒரு பொதுவான பெயரும், சின்னமும் இல்லை என்றால் எப்படி நாங்கள் அரசியலில் ஈடுபட முடியும். தேர்தல் நெருங்கும் வேளையில் எப்படி சின்னம் இல்லாமல் அரசியல் செய்ய இயலும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடியபோது, “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை டிடிவி தினகரனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியாக பதிவு செய்ய முடியுமா? ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகி தற்பொழுது சிறையில் உள்ளார். இதன் அடிப்படையில் இவர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கூடாது. ஏனெனில், கடந்த 2017 மார்ச் மாதம் டிடிவி, சசிகலா அணியில் பெரும்பாலான எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர், தொண்டர்களும் இருந்தார்கள். ஆனால் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார்.
அதேபோல மற்றொரு நிர்வாகியாக இருக்கக்கூடிய டிடிவி தினகரன் மீதான வழக்கில் தற்போது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிகளை தலைவராகக் கொண்ட கட்சியில் இருக்கக்கூடாது என்ற காரணத்தால் பெரும்பாலானோர் எங்கள் அணியில் இணைந்துவிட்டனர் என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட டிடிவி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "தற்போது தமிழக முதல்வராக இருக்கும் ஈ.பி.எஸ் மீதும் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்று நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
இருவரது கருத்துகளையும் கேட்ட நீதிபதிகள், “இரண்டு தரப்பினரிடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது ஒரு தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியதுபோல, மற்றொரு தரப்பான டிடிவிக்கு ஏன் ஒரு பொது சின்னத்தை வழங்கக்கூடாது" என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து, டிடிவி தரப்பு வழக்கறிஞர்களான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், “இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இடைக்காலமாக குக்கர் சின்னத்தையே தங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என மீண்டும் கோரிக்கை வைத்தனர்.
நீதிபதிகள், “அனைத்து தரப்பினரும், எழுத்துப்பூர்வமான தங்கள் வாதங்களை திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
வழக்கின் விவரங்களை டெல்லியிலிருந்து தினகரனுக்கு அப்டேட் செய்திருக்கிறார்கள். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு மீடியாக்களுக்கு பேட்டியளித்த தினகரன், “அமமுக கட்சியை பதிவு செய்யவில்லை. அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால்தான் நாங்கள் கட்சியை பதிவு செய்யாமல் இருந்துவந்தோம். குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறியிருக்கிறார்.
இருந்தாலும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தினகரன், உச்ச நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள், நீதிபதிகள் நமக்கு சாதகமாக இருப்பதாகச் சொன்னார்கள். மகிழ்ச்சி தான். ஆனால், பல வழக்குகளில் இப்படித்தான் நடக்கும். முடிவு மாறிவிடும். இன்று ‘எப்படியும் குக்கர் சின்னம் நமக்கு கிடைச்சுடும்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள இவ்ளோ சிக்கல் கொடுக்குறாங்க. குக்கர் சின்னத்தை நமக்கு கொடுக்க விடாம பண்றது தேர்தல் ஆணையமா? அல்லது அதிமுகவா? என்று எனக்கு சந்தேகமா இருக்கு. இதுக்குள்ள ஏதோ உள்குத்து வேலை நடக்குதுன்னு மட்டும் எனக்குத் தெரியுது. அது என்னன்னு கண்டுபிடிக்கணும். நானே ஒரு தடவை டெல்லிக்குப் போய்ட்டு வரேன். அப்போதான் என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்.
சின்னத்தால பெரிய பாதிப்பு இல்லைன்னு சொன்னாலுமே கூட, நம்மோட அடையாளமா இப்போ குக்கர் சின்னம் மாறிப்போச்சு. அதை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுடக்கூடாது. எப்படியும் வரப்போற தேர்தலுக்குள்ள இதை நாம வாங்கியே ஆகணும். இரட்டை இலை நம்ம கையை விட்டுப் போனது வேணும்னா நமக்கு பெரிய இழப்பா இல்லாமல் இருக்கலாம். ஆனா, குக்கர் போச்சுன்னா அது நமக்கு பெரிய இழப்புதான்" என்று சொல்லியிருக்கார் என்று

கருத்துகள் இல்லை: