புதன், 23 ஜனவரி, 2019

திருச்சியில் இன்று தேசம் காப்போம் மாநாடு .. சனாதனம் ஒழிப்போம் . சனநாயகம் காப்போம்! விடுதலை சிறுத்தைகள் எழுச்சி முழக்கம்!

திருச்சி - திரிச்சரணப் பள்ளி' என்ற சமணப் பெயர் கொண்ட திருச்சிராப்பள்ளி 
தினகரன்: திருச்சி, ஜன.23:  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன் தலைமையில் திருச்சியில் இன்று நடக்கும் தேசம் காப்போம் மாநாட்டிற்கு அனைவரும் திரண்டு வரவேண்டும் என்று மாநில நிர்வாகிகள் ரமேஷ்குமார், பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணை செயலாளர் ராஜா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகர், அரசு ஊடக மையத்தின் மாநில துணை செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:  சனாதானம் என்பது பழமைவாதத்தை குறிக்கும், ஆனால் பழமைவாதம் என்பது காலத்தால் பழமையானது என்று மட்டுமே பொருளாகாது.
மாறாக தற்போதைய காலச்சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத புதிய மாற்றங்களையும் துளியும் ஏற்காத ஒரு அடிப்படை வாதக்கருத்தியிலை குறிக்கும். இத்தகைய சனாதானம் மிகவும் கொடிய பயங்கரவாத கருத்தியலாகும். இது இந்திய தேசத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியதாகும். சனாதான பயங்கரவாதம் எனும் இக்கருத்தியல் மென்மேலும் வலிமை பெற்றால் இங்கே ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு இருக்காது.
அம்பேத்கர் வரையரறுத்து வழங்கி உள்ள அரசியலமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இருக்காது. ஒட்டு மொத்தத்தில் இந்திய தேசத்திற்கே பாதுகாப்பு இருக்காது.

 எனவே இத்தகைய சனாதான பயங்கரவாத கருத்தியல் இருந்தும், அதனை பரப்பி ஆதிக்கம் செலுத்திவரும் சனாதானிகளிடம் இருந்தும் இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் தவிர்க்க முடியாத கடமையாகும். இத்தகைய பொறுப்புணர்வில் இருந்தே அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் எனும் இந்த அறைகூவலை விடுக்கிறது. சனாதானமா? சனநாயகமா? எனும் இந்த அறப்போராட்டத்தில் ஜனநாயகமே வெல்லும் என்ற வகையில் நாடு தழுவிய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அரசியல் களத்தில் ஒருங்கிணைக்கவே இம்மாநாடு திருச்சி பொன்மலை ஜிகார்னர் மைதானத்தில் இன்று (23ம் தேதி) மாலை 5 மணிக்கு விசி கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சித்தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இந்த தேசம் காப்போம் மாநாட்டில் சனாதனத்தை வேரறுப்போம், புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தோடு கட்சியின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: