நிலைநாட்ட விரும்பும் மதவாத சக்திகளே சபரிமலையில் பிரச்சனைகள் ஏற்படுத்தினர்; அவர்கள் நடத்தும் போராட்டம் என்ற பெயரிலான வன்முறைகள் சமூகத்தில் ஈர்ப்பு ஏற்படுத்த வில்லை என்பது அவர்களுக்கே தெரியும்; கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு இங்கு நடப்பவை குறித்த தெளிவுஉள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரம் இஎம்எஸ் அகாடமியில் நடந்துவரும் பயிற்சிப்
1991 வரை இந்தப் பிரச்சனை இல்லை. அதுவரை மாதாந்திர பூஜை நேரத்தில் பெண்கள்
அங்கு செல்வது வழக்கத்தில் இருந்தது. அன்று அது ஒரு பிரச்சனையாக
இருக்கவில்லை. 1991இல் ஒரு நீதிபதியின் உத்தரவு வருகிறது. அது
சட்டவிரோதமானது என இப்போது உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. 91 முதல்
மட்டுமே கடைப்பிடிக்கும் ஒன்று நாட்டின் “ஆச்சாரமாக” மாறி விடுமா? கேரள
உயர்நீதிமன்றம் செய்த தவறை ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம்
திருத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றத்துக்கு எதிராக பேச முடியாததால் மாநில
அரசுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றியிருக்கிறார்கள்.நமது சமூகத்தில் ஆகப்
பெரும்பான்மையினராக கடவுள் நம்பிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக
யாரும் போர்ப் பிரகடனம் செய்துவிடவில்லை. கேரளத்தில் அரசியல் கட்சிகளில்
மிக அதிக மக்கள் செல்வாக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே உள்ளது.
அதில் அணிதிரண்டுள்ள மிகப் பெரும்பான்மையினரும் கடவுள் நம்பிக்கையாளர்களே.
இங்கு நம்பிக்கையாளர்களுக்கு எதி ரான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனது
நம்பிக்கை மட்டுமே இங்கு இருக்க வேண்டும்;
மற்றவர்களது நம்பிக்கைக்கு இடமில்லை என்று கூறி இடையூறு விளைவிக்கும் போது அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் தனது நம்பிக்கையை பின்பற்றுகிற சுதந்திரம் வேண்டும் என்கிற வகையில்தான் வலுவான தலையீடு மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கு எதிரான நகர்வு நமது சமூகத்தில் பழங்காலத்திலும் இருந்தது. அந்த சமூகம் பெருமளவுக்கு இன்று மாறியுள்ளது. வர்ண பேதமில்லாமல் அனைத்துப் பகுதியிலுள்ள பெண்களும் பெருமளவில் அடிமைத்தனத்துக்கு உள்ளாகினர். அத்தகு சமூகத்தை நாம் மாற்றி கைக்கொண்டிருக்கிறோம். ஆண்களுக்கு சமமாக பெண்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட பெண்களையே இப்போது அசுத்தமானவள் என்று கூறி விலக்கி வைக்க முயற்சிக்கின்றனர். எந்த வகையிலும் நமது சமூகத்தால் ஏற்க முடியாத நிலைப்பாடு அது. இதற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வது ஆண்-பெண் சமத்துவத்தை அங்கீகரிக்க முடியாதவர்களே. நமது சமூகத்தில் பழமைவாத குறுக்கீடுகள் முன்னுக்கு வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிரான வலுவான நிலைப் பாட்டை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
#தீக்கதிர் 21/1/2019

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக