திங்கள், 21 ஜனவரி, 2019

சபரிமலை கலவரகாரர்களுக்கு பிணை மறுப்பு .. நஷ்டஈடு தராமல் விடுதலை செய்யமுடியாது .. சங்கிகள் திண்டாட்டம்


SP Somasundaram : எலிப்பொறியில் சிக்கிய எலிகளைப்போல் சிறையில்
அடைபட்டுள்ள கலவர வலதுசாரிகளை பிணையில் வெளியே கொண்டுவர ஆகும் செலவுக்காக எல்லோரும் நிதி
தரவேண்டும் என்ற வேண்டுகோளை சமஸ்கிருதத்தில் "சதம் சமர்ப்பயாமி" என்ற பதத்தில் விடுத்து நூதன வசூலில் வலது சாரிகள் இறங்கியுள்ளனர்...
கடந்த இரண்டு தினங்களாக கேரள சமூக ஊடகங்களில் மிகுந்த கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது...
"சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி ஐயப்பனுக்காக சபரிமலை உண்டியலில் காணிக்கை செலுத்தக்கூடாது... ஏனெனில் அந்த காணிக்கை மூலம் வரும் வருமானத்தை அரசு எடுத்துக் கொண்டு பொது செலவுக்காகப் பயன்படுத்துகிறது...

இந்துவின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
அதை இந்துக்களாகிய நாம் அனுமதிக்கக் கூடாது. எனவே சபரிமலையில் காணிக்கை செலுத்தக் கூடாது" என்ற பிரிவினை விஷம் கக்கும் பிரச்சாரத்தை நடத்தி வந்தனர்...
இது மதசார்பற்ற கேரள பொது சமூகத்தால் புறந்தள்ளப்பட்டது...!
வலதுசாரி இயக்கத்தினர்கள் இது போன்றே... வாவர் சாமியை தரிசிக்க இந்துக்கள் போகக்கூடாது உள்ளிட்ட விஷமங்களையும் பரப்பி வந்தனர்...
இந்நிலையில் ஜன-3 அன்று கேரளாவில்... சபரிமலைக்கு இரண்டு பெண்கள் சென்று வந்ததைக் காரணம் காட்டி அதைக் கண்டித்து நடந்த பந்தில்... வலதுசார் இயக்கதினர்களால் பரவலாக கலவரம் நடத்த முயற்சி நடந்தது... இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்து வலதுசாரி இயக்கத்தினர்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தினர்...
இந்த பந்த் தினத்தன்று ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்ட வலதுசாரியினர் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க மறுத்து விட்டது... வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதரங்களுடன் குற்றச்சாட்டுகள் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்ட நிலையில் தான், நீதிமன்றம் இந்த உறுதியான நிலைபாட்டை எடுத்து கண்டிப்பாக இருந்து வருகிறது...
அதிலும் குறிப்பாக அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் பிணையில் விடுவிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது...
அவ்வாறு... ஆப்பு பிடுங்கிய குரங்குகளைப்போல் சிறையில் சிக்கி வெளியே வராமல் பரிதவித்து வரும் அடிமட்ட நிலையில் உள்ள வலதுசாரிகள் பிணையில் விடுவிக்க கேரள பாஜக தலைமை முயலவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து... அவர்களை பிணையில் வெளியே கொண்டு வர ஆகும் செலவுக்காக இப்போது பணவசூலில் இறங்கியுள்ளனர்...
அதற்காக வலதுசாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள சமஸ்கிருத முழக்கமே "சதம் சமர்ப்பயாமி"...
இந்த முழக்கத்தோடு நிதியுதவி தர வேண்டுகோள் விடுத்ததையடுத்தே, சமுக ஊடகங்களிலும், முக்கிய ஊடகங்களிலும் மிகுந்த கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளனர்...
சரி அந்த முழக்கத்தின் அர்த்தம் என்ன?
அது வேறொன்றுமில்லை.... "அம்மா... தாயே... கண்ணு தெரியாத எனக்கு ஏதாவது கொடுங்க..." என்று கேட்கும் வசனத்தோடு "நூறு ரூபாய் சேர்த்து கொடுங்க" என்பதையும் இணைத்துச் சொல்வது தான் "சதம் சமர்ப்பயாமி"...!
சிலர்...
ஐயப்பனுக்கு காணிக்கை செலுத்தக்கூடாது என்று சொன்னவனெல்லாம் 100 ரூபாய்க்கு தெருவுல பிச்சை எடுக்குற லெவலுக்கு ஐயப்பன் ஆளாக்கி பழிவாங்கிட்டாரு... இது ஐயப்பன் கோபம்தான் என்றும்...
இன்னும் சிலர்...
தோழர்கள் உண்டியல் வசூல் செய்வதைக் கிண்டல் செய்தவனெல்லாம் இப்போ பக்கெட்டோட 100 ரூபாய்க்கு அலைவதாகவும்...
வேறு சிலரோ...
கர்நாடகாவுல ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 50 கோடி கொடுக்க முடிகிற உங்க தலைமையால இந்த வழக்கு செலவை ஏற்க முடியாதா என்றும்...
இன்னும்... இன்னும்...
மீம்ஸ் வடிவில் சமூக ஊடகங்களில் வலதுசாரிகளை விடாமல் துரத்துகின்றன...
உச்சகட்டமாக... சுனிதா தேவதாஸ் என்ற பெண் ஊடகவியலாளர் ஒரு லைவ் விடியோவில்...
தலைமைச் செயலகத்தின் முன்பு வலதுசாரிகள் சார்பில் நடந்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் சபரிமலை மண்டல காலம் முடிந்து நடை சாத்தப்பட்டதனால் கைவிடப்பட்டது...
"போராட்டம் எல்லா வடிவத்திலும் தோல்வியடைந்து விட்டதால்... வேறு வழி தெரியாததால் போராட்டத்தை கைவிடுகிறோம்" என்பதை வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தில் ஸ்லோகம் போல் மாற்றித்தருகிறேன்... சமஸ்கிருதத்தில் "சதம் சமர்ப்பயாமி" மாதிரியே சொன்னால் கௌரவமாக இருக்கும் என்று கிண்டலாகக் கூறி சமஸ்கிருதத்தில் அந்த பதத்தையும் சொல்லியுள்ளார்...
"வயம் சர்வே அசகியே ரூபேண மானஹானி த்வாரா சமரா நிவர்தந்தயா ஹா சர்வேஷாம்... த்வஜப் ப்ரணாமம்...!" என்பதே அந்த வாக்கியம்.

கருத்துகள் இல்லை: