புதன், 23 ஜனவரி, 2019

பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம்... விளம்பரத்திற்கே 50% மேல் செலவாய்ருச்சாம்

Protection of Girl Child Scheme 50 Percent of the Money Spent on Advertisements tamil.oneindia.com - alagesan.: டெல்லி: பெண்
குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், விளம்பரத்திற்கு மட்டும் 56 சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் இத்திட்டத்தை ஹரியானாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும். இதில் ரூ.364.66 கோடி விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் மக்களவையில் தாக்கல் செய்த தகவலில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.200 கோடி நிதியில் ரூ. 135.71 கோடி (68% நிதி ) விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது.
மேலும், 2018-19-ம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்காக ரூ.280 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.155.71 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் 70.63 கோடி ரூபாய் மட்டும் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: