வெள்ளி, 25 ஜனவரி, 2019

செந்தில் பாலாஜி – கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக அறிவிப்பு

ஸ்டாலினோடு செந்தில்பாலாஜிvikatan.com/ துரை.வேம்பையன் : அ.ம.மு.கவில் இருந்து தி.மு.க வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக அறிவித்திருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன். கட்சி மாறிய 40 நாள்களுக்குள் தான் நினைத்த பதவியை பெற்று, செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட தி.மு.கவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அ.ம.மு.கவின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. டி.டி.வி.தினகரனோடு 18 எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்கம் சம்பந்தமான வழக்கின் மேல்முறையீடு, அ.தி.மு.கவையும், அ.ம.மு.கவையும் இணைக்க நடந்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்களால் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக கடந்த மாதம் 14-ம் தேதி தி.மு.கவில் ஐக்கியமானார். அதோடு, கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்டாலினை அழைத்து வந்து கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி, தன்னோடு 30,425 பேர்களை தி.மு.கவில் இணைத்து, ஸ்டாலினையே திக்குமுக்காட வைத்தார்.

இந்த நிலையில், கடந்த 22 -ம் தேதி கரூருக்கு ஸ்டாலினை அழைத்து வந்து தான் எம்.எல்.ஏவாக இருந்த அரவக்குறிச்சி தொகுதிக்குள் இரண்டு இடங்களில் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தினார். அதே தொகுதி லிமிட்டுக்குள் வரும் நொய்யல் குறுக்குச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்குப் பின்னே உள்ள காலி இடத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தினார். ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர்களுக்கும் தனி எண், அடையாள அட்டை என்று செந்தில்பாலாஜி நேர்த்தியாகச் செய்த ஏற்பாட்டைப் பார்த்து ஸ்டாலினே வாயடைத்துப் போனாராம்.

`இந்த 5 பேரில் ஒருவர் தான் அடுத்த சி.பி.ஐ இயக்குநரா?’- மோடி யாரை ‘டிக்’ செய்யப்போகிறார்

2 hour’s ago

‘சாதனைகள் செய்யவில்லை; மாணவர்களின் சந்தேகங்களை தான் தீர்த்தேன்’- போலீஸ் காவலிலும் கடமை தவறாத ஆசிரியர்

2 hour’s ago

உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் தனித்து களமிறங்கும் காங்கிரஸ் – சூடுபிடிக்கும் தேர்தல் களம்

7 hour’s ago
க.அன்பழகன்
ஸ்டாலின் இதை வெளிப்படையாகப் பாராட்டியதோடு, `செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்திருக்கும் இரவு உணவை உங்களோடு சாப்பிடுகிறேன்’ என்றபடி,தொண்டர்களோடு நின்றபடி பஃப்வே முறையிலான உணவைச் சாப்பிட்டார். இது தொடர்பாக  “கட்சி போச்சு!” கரூர் தி.மு.கவில் செந்தில்பாலாஜி எபெஃக்ட் என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது.
அதோடு,’தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனை ஓரங்கட்டிவிட்டு, செந்தில்பாலாஜி தனது எண்ணப்படி இந்த நிகழ்ச்சிகளை நடத்தினார். ‘ஸ்டாலினே தனது பிடிக்குள்தான் இருக்கிறார்’ என்பதை அவர் காண்பித்ததைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அதோடு, அவர் கரூர் மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்துத்தான் தி.மு.க.வுக்குத் தாவியதைப் பற்றி அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த நாம், ‘அந்த முயற்சியில் 80 சதவிகிதத்தை நெருங்கிவிட்டார்’ என்று தி.மு.க-வினர் சொன்னதையும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில், இரவு 9 மணி போல் தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன், ‘கரூர் மாவட்ட தி.மு.க செயலாளரான நன்னியூர் ராஜேந்திரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக கரூர் மாவட்டப் பொறுப்பாளராக செந்தில்பாலாஜி நியமிக்கப்படுகிறார். அவருக்குக் கரூர் மாவட்ட நிர்வாகிகளும், நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பைத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று அறிவித்துள்ளார். இது கரூர் மாவட்ட தொண்டர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்னியூர் ராஜேந்திரன்
இதுபற்றி, நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட தி.மு.க முக்கியப் புள்ளிகள் சிலர், “மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் கட்சியை வளர்க்கப் பாடுபடவில்லைதான். ஆனால், அதற்காகக் கட்சிக்கு வந்து 40 நாள்கூட ஆகாத செந்தில்பாலாஜிக்கு அந்தப் பதவியை தூக்கிக் கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம்? கரூர் மாவட்டத்தில் தி.மு.கவை வளர்க்க பாடுபட்ட எத்தனையோ முக்கியப் புள்ளிகள் இருக்கிறார்கள். முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசனின் தம்பி ரவிக்குமார் இருக்கிறார். இன்னும் பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, செந்தில்பாலாஜிக்கு கொடுத்திருப்பது வேதனை. அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்ததின் மூலம், மற்ற மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர் பதவி வரை அவரது ஆள்களையே அவர் நியமிப்பார். காலங்காலமாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள், அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்” என்று குமுறினார்கள்.
ஸ்டாலின்ஆனால்,செந்தில்பாலாஜி ஆதரவாளர்களோ,  “எங்கண்ணன் தி.மு.கவுக்கு வருவதற்கு முடிவு பண்ணி ஸ்டாலினை சந்தித்தபோதே, கட்சியில் சேர்ந்தவுடன் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி தர வேண்டும்’ன்னு உறுதி வாங்கிகிட்டுதான் கட்சி மாறினார். அதற்குப் பிரதிபலனா, கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும், மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.கவை ஜெயிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதன்படிதான் அண்ணனுக்கு முன்னாடியே தி.மு.க தலைமையிடம் போட்ட ஜென்டில்மேன் அக்ரிமென்படி பதவி கிடைச்சிருக்கு. ஆனால், அண்ணனுக்கு இவ்வளவு சீக்கிரம் பதவி கிடைத்தற்கு காரணம், ‘தி.மு.கவுக்குப் போனால் பதவி கிடைக்கும்’ என்ற ஆசையை அ.ம.மு.கவின் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் 17 எம்.எல்.ஏ-க்களையும், அ.தி.மு.கவினரையும் தி.மு.க நீக்கி வரவைக்க ஸ்டாலின் நினைப்பதுதான். இன்னும் புரியிற மாதிரி சொன்னா, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க ஸ்டாலின் நினைக்கிறார்” என்றார்கள்.
vikatan.com

கருத்துகள் இல்லை: