ஞாயிறு, 20 ஜனவரி, 2019

வங்க மொழியில் அசாத்திய ஸ்டாலின் .. கொல்கொத்தாவில் மம்தா மாநாட்டில்


MK Stalin of the DMK, speaking in Tamil at Kolkata’s Brigade ground, today said Prime Minister Narendra Modi is “afraid of a few people,” among them West Bengal Chief Minister Mamata Banerjee, who he called an “iron lady.”
அகில இந்திய அளவில் மாநில உரிமைகள் மாநில அடையாளங்கள் என்றதுமே மக்களுக்கு தமிழ்நாடுதான் நினைவுக்கு வருகிறது. மாநில மொழி மாநில அரசியல் கலாசாரங்களை ஹிந்தி பேரினவாதத்தில் இருந்து காத்துகொண்ட ஒரு உதாரண மாநிலமாக தமிழகம் விளங்குகிறது .
ஆர் எஸ் எஸ் பின்னணியின் அகண்ட ஹிந்தி ஹிந்து ராஷ்டிரா வாதத்தின் எழுச்சியின் பயனாக என்றும் இல்லாத முறையில் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் மாநில உணர்வுகள் தற்போது மேலோங்கி இருக்கிறது.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் இந்த உணர்வு தற்போது கரை புரண்டு ஓடுகிறது.
பக்கத்திலேயே சுதர்ந்திர வங்கதேச நாடு இருப்பது மேற்கு வங்க மக்களின் மாநில உணர்வுக்கு நிச்சயம் ஒரு உணர்வு பின்தளமாக இருப்பதை யாரும் மறுத்து விடமுடியாது..
மேற்கு வங்கம் கர்நாடகம் தெலங்கான வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் தற்போது தங்கள் தங்கள் மாநில அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சி ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது . தமிழகத்தில் அது நீண்ட நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது.
இந்த சூழ்நிலையில் கொல்கொத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் இடம்பெற்ற தேசிய எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு வங்காளி மொழியிலும் தமிழிலும் உரையாற்றினார்.
இது சரித்திர நிகழ்வு .
மேற்கு வங்கம் மிக ஆவலுடன் அதிசயத்துடன் தமிழகத்தை நோக்குகிறது. மாநில உணர்வுகளை தேசிய அரங்கில் மேடை ஏற்றிய தமிழகத்தின் மாண்பு மேற்கு வங்கத்திற்கு மட்டுமல்ல எல்லா மாநிலங்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகும்.


இந்த வாய்ப்பை மிக சரியாக திமுகவும் தலைவர் ஸ்டாலினும் பயன்படுத்தி உள்ளனர்..
எமர்ஜென்சி அடக்குமறை காலங்களில் அகில இந்தியாவுக்கே தமிழகம்தான் ஒரு பாதுகாப்பு அரணாக வழிகாட்டியாக தமிழகம் விளங்கியது. அது கலைஞர் அன்று எழுதிய இந்திய வரலாறு.
இன்று அதன் தொடர்ச்சி என்று எண்ணக்கூடிய அளவில் மாநில எழுச்சிக்கும் இந்திய ஜனநாயக பாதுகாப்பிற்கும் ஸ்டாலின் மிக சரியான ஒரு பாதையில் பயணத்தை தொடங்கி உள்ளார் .திமுக தலைவர் தளபதிக்கு எனது வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை: