வியாழன், 17 ஜனவரி, 2019

திருச்சி .. காதலன் குத்தி கொலை காதலிமீது பாலியல் வன்முறை .. 4 குற்றவாளிகள் தப்பி ஓட்டம்

தினகரன :மண்ணச்சநல்லூர் : திருச்சி அருகே பொறியியல் கல்லூரி மாணவன், தனது கல்லூரி காதலியுடன்  காட்டில் ஜாலியாக இருந்தபோது அந்த வழியாக வந்த 4 மர்ம ஆசாமிகள் மாணவனை படுகொலை செய்து விட்டு மாணவியை மாறி மாறி பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் சமயபுரம், லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம்  சிறுகனூர் அருகே திண்ணக்குளம் ஊரை சேர்ந்தவர் கண்ணன், விவசாயி. இவரது மகன் தமிழ்வாணன் (23), சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் கோவண்டாகுறிச்சியை சேர்ந்த  ராணி (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதாலும், ஒரு வகுப்பில் படித்து வந்ததாலும் தமிழ்வாணன், ராணி இடையே காதல் மலர்ந்தது.
நேற்று பொங்கல் விடுமுறை தினம் என்பதால் இருவரும் மாலையில் பைக்கில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள கொணலை மலைமாதா கோயிலுக்கு சென்றனர். விடுமுறை தினம் என்பதால் மாதா கோயிலில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இருவரும் இரவு 7.30 மணி வரை மாதா கோயிலில் இருந்து விட்டு பின்னர் பைக்கில் ஊர் திரும்பினர்.
8 மணி அளவில் கண்ணாக்குடி- புஞ்சை சங்கேந்தி இடையே வனத்துறைக்கு சொந்தமான ரிசர்வ் பாரஸ்டில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் கிடையாது. எப்போதாவது பஸ்கள் வரும்.  மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது.


இந்த காட்டுப்பகுதியில் வந்ததும் தமிழ்வாணன் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு ராணியை அழைத்துக்கொண்டு காட்டின் உள்பகுதிக்கு சென்றார். இருவரும் அங்கு ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக 2 பைக்கில் 4 பேர் வந்துள்ளனர். அவர்கள் சாலையோரம் பைக் அனாதையாக நிற்பதை அறிந்து அங்கு நின்று கவனித்தனர். அப்போது, சிறிது தூரத்தில் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து 4 பேரும் அங்கு சென்றனர். அப்போது, ஒரு காதல் ஜோடி ஜாலியாக இருந்ததை பார்த்த அந்த கும்பல், தமிழ்வாணனை சரமாரியாக தாக்கி  ராணியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, 4 பேருடனும் தமிழ்வாணன் போராடி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் தமிழ்வாணன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, ராணியை மாறி மாறி பலாத்காரம் செய்தனர். மாணவி கூச்சல் போட கூடாது என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து கட்டிவிட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் 4 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி கொடூரமாக பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்கள் சென்றதும் மிக சோர்வுடன் எழுந்து ராணி, வாயில் இருந்த துணியை எடுத்த தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து, சிறுகனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நள்ளிரவு 1 மணி அளவில் போலீசார் அங்கு வந்து ராணியிடம் விசாரணை நடத்தி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தமிழ்வாணன்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராணியை அதே பகுதியை சேர்ந்த இன்னொருவரும் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தான் தனது நண்பர்களுடன் வந்து இந்த கொலை, பலாத்காரத்தில் ஈடுபட்டாரா, அல்லது வழக்கமாக இந்த காட்டில் திரியும் வழிப்பறி கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் பற்றி அறிந்த எஸ்.பி. ஜியாஉல்ஹக் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 கொடூரன்களையும் தேடி வருகின்றனர்.

போராடிய தமிழ் வாணன்

4 காமக்கொடூரன்களும் தமிழ்வாணனை தாக்கியபோது, அவரை விட்டு விடும்படி ராணி கெஞ்சி உள்ளார். ஆனால் அவர்கள் ஈவு இரக்கமின்றி கடுமையாக தாக்கினர். சுமார் 10 நிமிடங்கள் தமிழ்வாணன், 4 பேரையும் எதிர்த்து தாக்குதல் நடத்தி உள்ளார். அதன் பிறகே 4 பேரும் அவரை கீழே தள்ளி கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்து உள்ளனர்.

கற்பை காக்க ஓட்டம்

தமிழ்வாணனை கொலை செய்ததை பார்த்த ராணி, இனி கொலைகாரர்கள் தன்னை விடமாட்டார்கள் என்பதை அறிந்து கற்பை காக்க காட்டுக்குள் ஓட்டம் பிடித்தார். ஆனால் 4 பேரும் விடாமல் துரத்தி பிடித்து மாறி மாறி கற்பை சூறையாடினர்.  அதன்பிறகு அவர்கள் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பி உள்ளனர்.

8 வருட காதல்

கொலைசெய்யப்பட்ட தமிழ்வாணனும், ராணியும்  விரகாலூர் பள்ளியில் ஒன்றாக படித்தனர். கடந்த 8 வருடங்களாக அவர்களுக்குள் நட்பு இருந்தது. பின்னர் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தவர். பள்ளியில் ஏற்பட்ட நட்பு கல்லூரிக்கு வந்ததும் காதலானது. ராணியை மேலும் சில மாணவர்கள் விரும்பி உள்ளனர். ராணியும், தமிழ்வாணனும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இது இன்னும் பெற்றோருக்கு தெரியாத நிலையில் காதல் போட்டியில் இன்னொரு தரப்பு மாணவன் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகிறார்கள்.

கொள்ளையர்கள் நடமாடும் பகுதி

கொலை, பலாத்காரம் நடந்த இடம் வனப்பகுதியாகும். பகலிலேயே இந்த காட்டுக்குள் தனியாக யாரும் செல்ல மாட்டார்கள். அந்த அளவு இந்த பகுதியில் வழிப்பறி பயம் உண்டு. ஆனால் தமிழ்வாணன் இரவு நேரத்தில் காதலியுடன் போய் உள்ளார். இதை அறிந்து அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தான் இதை செய்திருக்க வேண்டும். அல்லது வழக்கமாக இந்த வனப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபடுகிறவர்கள், காதல் ஜோடி உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் காமம் தலைக்கேறிய நிலையில் இந்த கொலை, பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என பல கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் லால்குடி, சிறுகனூர், சமயபுரம், புஞ்சை சங்கேந்தி பகுதிகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்ததும் இன்று கல்லூரி மாணவ, மாணவிகள்  கண்ணீர் மல்க தமிழ்வாணன் வீட்டில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

கருத்துகள் இல்லை: