புதன், 16 ஜனவரி, 2019

சபரிமலை சென்ற கனகதுர்காவுக்கு அடி உதை.. மாமியாரின் வெறியாட்டம் வீடியோ .


Hemavandhana- tamil.oneindia.com: சபரிமலை: போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு வந்த 38 வயது கேரள பெண் கனக துர்காவை அவரது மாமியார் மிக கடுமையாக அடித்து உதைத்துள்ளார் என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் படுகாயம் அடைந்த கனகதுர்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. பாலின பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த உத்தரவினை நீதிமன்றம் வழங்கியதாக ஒரு தரப்பு பார்க்கப்பட்டது. எனினும், இது இந்து மதத்திற்கு எதிரான தீர்ப்பு என்று மற்றொரு தரப்பினர் விமர்சித்தனர்.
இதனால் இத்தீர்ப்பை கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருவதால் கேரள மாநிலமே கொதிப்பில் உள்ளது.


இதனால் சபரிமலைக்கு பெண்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அம்மாநில அரசு பெண்கள் கோயிலுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி கடந்த ஜனவரி 2-ம் தேதி கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த சம்பவத்துக்கு பிறகு, இந்த இரு பெண்களுக்கும் போராட்டகாரர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்தது. அதனால் இரு பெண்களும் கடந்த இரு வாரங்களாக போலீஸார் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கனகதுர்கா மலப்புரம் அங்காடிபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி சென்றார்.

அப்போது சபரிமலை சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனதுர்காவை அவரது மாமியார் உட்பட உறவினர்கள் அனைவரும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் கனகதுர்காவுக்கு தலை மற்றும் உடம்பெல்லாம் படுகாயம் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக பெருந்தல்மன்னாவில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் ஷாக் கேரளாவில் ஷாக் போராட்டக்காரர்கள் மத்தியில் கனகதுர்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று நினைத்த வேளையில், அவரது வீட்டிலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது<

கருத்துகள் இல்லை: