சனி, 19 ஜனவரி, 2019

பா.ம.க.வுக்கு 9 தொகுதிகள் .. பாஜக கூட்டணியில் இணைகிறது

மாலைமலர் : வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் பாமக சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பா.ம.க.வுக்கு 9 தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரகசிய பேச்சுவார்த்தை- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இணைகிறது சென்னை: தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும் என்று டெல்லி தலைவர்கள் கூறி வரும் நிலையில் தமிழகத்தில் அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒவ்வொரு முகாமிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி மதுரையில் தனது முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் கூட்டணி அறிவிப்புகளையும் வெளியிடும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திப்போம் என்று பா.ம.க. அறிவித்துள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் இருவர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
தொகுதி ஒதுக்குவது உள்ளிட்ட சில பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்படாததால் பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் சேரும் முடிவை கைவிட்டது. ஏற்கனவே கடந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பா.ம.க.வுக்கு 9 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் இந்த கட்சிகளுடனான பேச்சு வார்த்தை முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: