புதன், 16 ஜனவரி, 2019

காணும் பொங்கல்; கடற்கரைச் சாலையில் பயணிப்போருக்கான போக்குவரத்து மாற்றம்

tamil.thehindu.com : காணும்பொங்கலை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரைக்கு வருவோர் அல்லது கடற்கரை சாலை வழியாக அடையாறு நோக்கி அல்லது பாரிமுனை நோக்கி செல்வோர் கவனத்திற்காக போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: “நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காமராஜர் சாலையில் பொதுமக்கள் சாலையில் முழுவதுமாக நிரம்பும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது.
* உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும்போது, கீழ்க்கண்ட மாற்றங்கள் நடக்கும்.
 * அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

* கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலை ஒரு வழிப்பாதையாக இருக்கும்.
* வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில், பெல்ஸ் சாலையில் வாகனங்கள் நுழையாத வண்ணம் வாகனங்கள் திருப்பப்படும்.
* பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
மேற்கண்ட மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஒத்துழைப்புத்தருமாறு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: