திங்கள், 14 ஜனவரி, 2019

சபரிமலை .. கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி .. U Turn?

சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்திதினத்தந்தி :சபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
துபாய், அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலை விவகாரத்தில் அரசைக் கண்டித்து, கோயிலில் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. ஆனால் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை ஆதரிப்பதாகவும், அதனை வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரை கூறி வந்தார். பல நேரங்களில் இதுபற்றி கருத்து கூறுவதை தவிர்த்து வந்தார்.


இந்தநிலையில்,  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, சபரிமலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி கூறியதாவது:- “கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருடன் சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினேன். அவர்கள் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தனர். முன்பிருந்ததைவிட கேரளத்தில் தற்போது நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்பதை அதன்மூலம் உணர்ந்து கொண்டேன்.
சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை அந்த மாநில மக்களே முடிவு செய்யட்டும்.

முன்பு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் தற்போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சபரிமலை விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாத நிலைமையில் இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை: