வெள்ளி, 18 ஜனவரி, 2019

எம்ஜிஆர் பிறந்த தினம்.. போலித்தனங்களுக்கு அப்பால் உள்ளது உள்ளபடி ... Flashback

ஆலஞ்சியார் : எம்ஜிஆர் பிறந்த தினம்.. ஜனவரி17.. நண்பர் கேட்டார் உங்கள்
தலைவரின் நண்பரைப் பற்றி ஏன் எழுதவில்லை ..
எம்ஜிஆரை நல்ல கலைஞனாகவோ அல்லது சிறந்த அரசியல் ஆளுமையாகவோ என்னால் கருத முடியவில்லை சினிமா எனும் நிழற்கூடம் கற்பித்திருந்த மதிமயக்கும் மாயவலை என்போன்ற இளைஞர்களை வெகுவாக வழிகெடுத்ததென்பது உண்மை கவர்ச்சியும் அழகும் நிஜமென்று நம்பியதன் விளைவு அரசியலில் மிக பெரிய கேட்டை தமிழகம் கண்டது அதன் தொடர்ச்சியை இப்போதும் அனுபவிக்கிறோம்,..
.. இன்றைய தினம் அவரை புகழ்ந்து போலித்தனமாக எழுத இயலவில்லை.. இன்றைய தமிழர்களின் சங்கடங்களுக்கு காரணியாக இருந்தவர் எந்த தொலைநோக்குமில்லாது ..மனிதர்களை ஏழைகளாக வைத்திருக்கவேண்டுமென்று நினைத்தவர்.. சுயசிந்தனையற்றவர்களாக சினிமாத்தனத்திலேயே தமிழ்மக்களை மாயவலையிலேயே வைத்திருந்தவர்..
திராவிடர்களை தமிழர்களை ஆரியர்களின் கைகளுக்குள் மீண்டும் கொண்டுசேர்த்தவர்.. இவர்களின் கைபாவையாகவே கடைசிவரை இருந்தார்.. பாசிசத்தின் பரிவும் கனிவும் இவரைப்பற்றிய பிம்பத்தை ஊதிபெரிதாக்கின
திராவிடத்தை வீழ்த்த பயன்படுவாரென்று கணக்கிட்டே இவரை உயர்த்திபிடித்தார்கள்

இன்றைக்கு பொருளாதார அளவுகோலில் இடஒதுக்கீடு மத்திய அரசால் கொண்டுவரபட்டிருக்கிறதே .. அதை முதன்முதலில் இவரை கொண்டு சமூகநீதி பேசும் மாநிலத்தில் எந்த கொள்கைக்காக திராவிட இயக்கம் தோன்றியதோ அந்த இயக்க பின்னணியில் இருந்த வந்த எம்ஜிஆரை கொண்டே நடைமுறைப்படுத்த ஆர்எஸ்எஸ் துணிந்தது அதற்கு எம்ஜிஆர் துணைபோனார்
இந்தியாவிலேயே முதன்முதலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார்.. அதன் விளைவு
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்கள் தான் அவரால் வெல்லமுடிந்தது
..
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தவுடன் கடைசிவரை காங்கிரஸை கைவிடாமலேயே அவர்களின் பாட்டுக்கு ஆடினார்...
இந்திராவின் சாவும் அவரது நோவும் கடைசிவரை கைகொடுத்தது.. மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர.. அப்போது கூட சிறந்த திட்டங்களை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தவில்லை..
தமிழகத்தின் ஒரளவு நாகரீக அரசியல் செய்திருந்தாலும் காழ்புணர்வு அரசியல் வர காரணமாக இருந்தவர்.. கலைஞரோடு யாராவது சந்தித்தாலே கட்டம் கட்டி விலக்கிவைப்பார் இதற்காகவே கலைஞரை சந்திப்பதையே தவிர்த்தார்கள் .. சீமானின் மாமியார் மதுரையில் கலைஞருக்கு கட்அவுட் வைத்து வரவேற்றதும் ..உடனே காளிமுத்துவை விலக்கி வைத்தார் .. அவரை புகழ்ந்தவர்களுக்கு இதயக்கனியாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.
..
யார் இந்த எம்ஜிஆர்..
அவரின் மறுபக்கத்தை மிக சுவாரஸ்மாக ரசிக்கலாம்.. வெளிப்புற தோற்றம் அழகால் ஆனது ஆனால் உட்புறமோ..
வேறெங்கும் விடைதேட தேவையில்லை..
திரு.ஜேப்பியார் சொன்ன விடயம் ஒன்றே போதும் எம்ஜிஆர் என்னிடம் திரு.சோபன்பாபு கஸ்டடியில் இருக்கிறார் அவரை அழைத்துவரவேண்டுமென பணித்தார் நான் தான் அவரை மிரட்டி அழைத்து ஒரு இரவு என்னோடு வைத்திருந்துவிட்டு பிறகு பொன்மன செம்மலிடம் ..? ஒப்படைத்தேன் என வெளிப்படையாகவே சொன்னார்
ஜெயலலிதாவை குடும்ப வாழ்விற்குள் செல்லவிடாமல் அழுத்தம் தந்து கடைசிவரை ஜெயித்தவர் மகோரா..
..
அரசியலில் அவரது பயணம் விமர்சனத்திற்கு உரியதென்றாலும் சினிமா நடிகனாக மிகப்பெரிய வெற்றியை தன்னிடம் மட்டுமே வைத்திருந்தவர் தமிழ்சினிமா ரசிகனின் மனநிலையை அறிந்து செயல்பட்டவர் எம்ஜிஆர் பார்முலா இன்றுவரை வெற்றிபெறுகிறதே அதிலிருந்தே மறைக்கமுடியாத சினிமாகலைஞராக நூற்றாண்டு பின்னிட்டும் திகழ்கிறார்.. நல்ல நடிகனா சிறந்த நடிகனா என்பதைவிட #வெற்றி_நடிகர் என்று அழைக்கலாம்
தமிழ்சினிமா வரலாற்றை யாரை மறுத்து மறந்து எழுதினாலும் மகோரா எனும் எம்ஜிஆரை மறுத்தோ/மறந்தோ எழுதிவிடமுடியாது..
..
#தமிழ்சினிமாரசிகனின்_இதயக்கனி...
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: