செவ்வாய், 15 ஜனவரி, 2019

சந்திரனில் முளைத்த பருத்தி செடி; சீனா விஞ்ஞானிகள் சாதனை... China moon: First crops sprout – potatoes in 100 days

gfcnakkheeran.in - கிருபாகர்
யாரும் இதுவரை பார்த்திடாத நிலவின் மறுபக்கத்தை ஆராய்ச்சி செய்வதற்காக  கடந்த மாதம் 8ஆம் தேதி சாங் இ-4 என்ற விண்கலத்தை சீனா நிலுவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் 25 நாட்களுக்கு பின் கடந்த 3ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதி என கூறப்படும் பகுதியில் இறங்கியது.நிலவின் மறுப்பக்கத்திலிருந்து யாரும் இதுவரை கண்டிராத புகைப்படங்களை அந்த விண்கலம் சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது.
இந்த ஆய்வில், நிலாவின் தரை பரப்பில் என்னென்ன தனிமங்கள் உள்ளன, அங்குள்ள கதிர்வீச்சின் அளவு எப்படி உள்ளது என்பதையெல்லாம் ஆராய்ந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் அங்கு உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியின் ஓர் பகுதியாக தனது விண்கலத்தில் உருளைக்கிழங்கு, பருத்தி விதைகள், அராபிடாப்சிஸ் தாவர விதை மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில் கொண்டு செல்லப்பட்ட பருத்தி விதைகள் தற்பொழுது முளைக்க ஆரம்பித்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பருத்திச்செடி வளர்ந்துவரும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.<

கருத்துகள் இல்லை: