ஞாயிறு, 13 ஜனவரி, 2019

கொடநாடு ஷயான், மனோஜ் டெல்லியில் கைது ஏ.கே.விஸ்வநாதன் தகவல்.. இருவரும் கடத்தபட்டுள்ளதாக மத்தியுஸ் வாட்சைப் அறிவிப்பு .. youtube


தினத்தந்தி :கோடநாடு வீடியோ விவகார வழக்கில் ஷயான், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே அவரது கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று கூலிப்படைத் தலைவன் ஷயான் நேற்று முன்தினம் டெல்லியில் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.
 மேலும், கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பான ஆவணப் படத்தையும் வெளியிட்டு, பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில இணை செயலாளர் ராஜன் சத்யா என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில், பேட்டியளித்த கூலிப்படைத் தலைவன் ஷயான், டெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், மற்றொரு குற்றவாளி மனோஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மேத்யூசை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றனர்.

சயனை பிடிக்கவும் கேரளா சென்றனர். கோடநாடு வீடியோ விவகார வழக்கில் ஷயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் கைது செய்ப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷயான், மனோஜ் இன்று இரவு சென்னை அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: