வியாழன், 17 ஜனவரி, 2019

பிரெக்சிட் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் ப்பந்தத்தை நிராகரித்தது இங்கிலாந்து நாடாளுமன்றம்…

ndtvimg.: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்கவில்லை.
இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிராக 432 பேர் வாக்களித்தனர். ஆதரவாக வெறும் 202 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர்.
;பிரெக்சிட் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பல மாதங்களாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். தற்போது அந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காததால், தெரசா மே-வுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரெக்சிட் ஒப்பந்தம் செயல்படுத்தப்படுமேயானால், வரும் மார்ச் 29 ஆம் தேதியுடன் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் தெரெசா மேவுக்கு எதிராக, அவரது கட்சியினர் பலரும் வாக்களித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரண்டு கட்சிகளுக்குள்தான் வாக்குவாதம் நடக்குமே தவிர, ஒரே கட்சிக்குள் கலகம் நடக்காது. ஆனால், இன்று மேவுக்கு எதிராக நடந்த செயல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

;நாடாளுமன்றத்தில் நடந்தது குறித்து அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின், “இரண்டு ஆண்டுகளாக பிரெக்சிட் ஒப்பந்தத்துக்காக பேசி வருகிறா மே. இனியும் இதில் ஒரு நல்ல டீல் செய்ய முடியும் என்று அவர் நம்ப முடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

;முன்னதாக ஒப்பந்தத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசிய மே, “இன்று நாம் வாக்களிக்கப் போவது இந்தத் தலைமுறையின் மிக முக்கிய முடிவாக இருக்கும். என்னுடைய பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவளியுங்கள். இல்லையென்றால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறினார்.<

கருத்துகள் இல்லை: