செவ்வாய், 15 ஜனவரி, 2019

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திரிபுவாதங்களுக்கு மறுப்பு

Manjai Vasanthan : சூரியன் இருப்பை வைத்து ஆண்டுக் கணக்கீடு தை 1இல்தான்
தொடக்கம்! சித்திரை 1 என்பது மோசடி. இந்துமதம் சூரிய இருப்பை வைத்து தமிழ் வருடப் பிறப்பு என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை!
ஆரியர்களுக்கென்று எந்த உரிமையும், பெருமையும், அறிவும், ஆற்றலும் எப்போதும் இருந்ததில்லை.
தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியில் அயல்நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் ஊடுருவி அபகரித்து இன்று ஆதிக்கம் செய்கின்றனர்.
தமிழ் மொழியில் களவாடி சமஸ்கிருதத்தை உருவாக்கிக் கொண்டனர்.
தமிழரின் சித்த மருத்துவத்தை ஆயுர்வேதமாக மாற்றினர்.
தமிழர் இசையை தங்கள் இசையாக தமிழர் கலைகளைத் தங்கள் கலைகளாக மாற்றியதுபோல,
தமிழர் ஆண்டை மறைத்து தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தி, புராணக் கதை எழுதி சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு என்று ஆக்கினர்.
சமஸ்கிருத ஆண்டை தமிழ் ஆண்டு என்று கொண்டாடும்படியான கேவலத்தை உருவாக்கினர்.

அன்றைய ஆரியப் பார்ப்பனர்கள்தான் அயோக்கியத்தனமாக இவற்றைச் செய்தனர் என்றில்லாமல், பார்ப்பனர்களின் இன்றைய இளந்தலைமுறையினர் அறிவியல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மோசடியாகச் செய்திகளைப் இணையதளத்தில் பரப்பி தமிழரின் கலாச்சாரத்தை அழித்து அவர்களின் மதமான இந்து மதத்தை வளர்க்கப் பார்க்கின்றனர்.
இதோ ஓர் எடுத்துக்காட்டு
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு உண்மையான காரணத்தை சூரியன் இருப்பைக் கொண்டு தமிழர்கள் நாம் விளக்கி வருகிறோம்.
அதாவது, சூரிய இருப்பைக் கொண்டே தமிழர் ஆண்டு கணக்கு செய்தனர். அதுவே உலக அளவில் பின்னாளில் பின்பற்றப்பட்டது என்று நாம் பல ஆண்டுகளாக கீழ்க்கண்டவாறு விளக்கி வருகிறோம்.
தமிழரின் காலக்கணக்கீடுகள்
தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.
காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.
மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.
முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.
அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)
உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.
சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் முதல் நாள். தமிழரின் புத்தாண்டு அன்றுதான்..
ஆரிய அம்பியின் திரிபுவாதம்
நமது இந்த அறிவியல் விளக்கத்தை அப்படியே திரித்து ஓர் ஆரியப் பார்ப்பான் கீழ்க்கண்டவாறு மோசடி செய்துள்ளான்.
சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்....
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்குனு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்.!!!!
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் சித்திரை
1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox)
பிறகு சரியாக வடகிழக்கு புள்ளி தான் ஆடி 1 .... (solstice))
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது ஐப்பசி 1 (equinox))
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது தை 1 (solistice)”)
என்று இந்து சமயம் சொல்லிவைத்துள்ளது என்கிறான் அந்த அம்பி. தமிழர் கூறியதைத் திரித்து சித்திரையை முதல் நாள் ஆக்குகிறான் இவன். சூரியன் நமக்கு நேரே வருவது சித்திரை ஒன்றில் மட்டுமல்ல.
அய்ப்பசி ஒன்றிலும் வருகிறது. அப்படியென்றால் அய்ப்பசி ஒன்றாந்தேதியை வருடத்தின் தொடக்கமாக ஏன் கொள்ளக் கூடாது. இந்த அரைவேக்காடு அம்பி பதில் சொல்லுமா? சூரிய இருப்பைக் கணக்கில் எடுக்கும்போது ஒரு முனையிலிருந்துதான் எடுப்பார்கள். நடுவிலிருந்து எடுக்க மாட்டார்கள். கடிகார பெண்டுலத் தொடக்கம்கூட ஒரு முனையிலிருந்துதான் வரும். நடுவிலிருந்து வராது.
சூரியனின் வடகோடி இருப்பை எடுக்காது தமிழர் தென்கோடி இருப்பை எடுத்ததற்குக் காரணம், தென்கோடி இருப்பில் இருக்கும்போதுதான் அறுவடை முடிந்து வருவாய் பெறும்காலம்.
வடகோடியில் இருக்கும் ஆடி மாதம் உழவு தொடங்கும் நாள். விளைவு வீடுவரும் காலத்தை ஆண்டின் தொடக்கமாக எடுத்தனர். அது மட்டுமல்ல நாம் நிலப்பகுதியில் தெற்கில் இருப்பதால் தென்முனையை எடுத்தனர்.
உண்மை இப்படியிருக்க இந்த அரை வேக்காடு ஆரிய அம்பி சூரிய இருப்பை வைத்து சித்திரை 1 ஆண்டின் தொடக்கமாக இந்து மதத்தில் கொள்ளப்பட்டது என்கிறான்.
மோசடியின் மொத்த உருவமே! உன் இந்து மதம் சித்திரை வருப் பிறப்பு பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா என்று கேட்டார். அதற்கு கண்ணன், நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள் என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்த, யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள் என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார்.
அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அறுவறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர்.
ஆணுக்கும் ஆணுக்கும் 60 பிள்ளை பிறந்தது. அவையே தமிழ் வருடம் என்கிறது உன் இந்து மதம். நாற்றம் பிடித்த இந்து மத ஆபாசத்தை தமிழர் சிறப்பில் கலந்து திரித்து மோசடி செய்யப் பார்க்கிறாயா? நாங்கள் விழித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அது சரி, சித்திரையில் தொடங்குவது தமிழர் வருடம் என்கிறாயே பிரபவ தொடங்கி இந்து மதம் சொல்லும் வருடப் பிறப்பில் ஒன்றாவது தமிழ்ச் சொல் உண்டா? எல்லாம் சமஸ்கிருதச் சொல்தானே! தமிழ்ச் சொல்லே இல்லாத சமஸ்கிருத ஆண்டு.
எப்படி தமிழ் ஆண்டாகும்? இந்து மதம் சொல்வது உலக மகா மோசடி அல்லவா? இந்து மதம் சொல்லாததைச் சொல்லும் நீ அண்டப் புரட்டன் அல்லவா?
ஆரிய அம்பிகள் பலர் இப்படிப் புறப்பட்டுள்ளனர். தமிழர்களே! குறிப்பாக இளைஞர்களே எச்சரிக்கை

கருத்துகள் இல்லை: