
நிகழ்ச்சியில் மரபை மீறி அமைச்சர்கள், அரசியல்வாதிகளை முன்வரிசையில் அமரவைத்து நீதிபதிகளுக்கு கடைசி இடம் ஒதுக்கியது கண்டனத்திற்குரியது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக முத்தரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் மரபு ரீதியாக நீதிபதிகளுக்கு முன்வரிசை அளிக்கப்படாமல் அவர்களுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.< அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் முன்வரிசையில் அமரவைத்து நீதிபதிகளுக்கு கடைசி இடம் ஒதுக்கியது மரபு மீறிய செயல்மட்டுமல்லாமல் நீதியின்பால் அரசுக்குள்ள அணுகுமுறையை இது உணர்த்துகிறது.
இது ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் இதற்கு முழுப் பொறுப்பை ஆளுநரே ஏற்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் சரி செய்யப்பட வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக