செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த்

Lakshmi Priya - ONEINDIA TAMIL  சென்னை: கலைஞருக்கு  மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கலைஞருக்கு  சினிமா துறை சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சி  நடைபெற்றது. 
 இதில் ஸ்டாலின், ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலைஞரின்  படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 
பின்னர் ரஜினி கூறுகையில் கலைஞர்  இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. நான் கலைஞருக்கு  அஞ்சலி செலுத்தி கிளம்பி வந்தபோது அந்த காலையிலேயே அப்படி ஒரு கூட்டம். அதைப் பார்த்து நான் அசந்து விட்டேன்.
கலைஞருக்கு  கூடிய கூட்டத்தைப் பார்த்ததும், என்றென்றும் நன்றி மறவாதவர்கள் தமிழர்கள் என்று நெகிழ்ந்தேன். கலைஞர்  இறுதி நிகழ்ச்சிக்கு வந்த மக்கள்  கூட்டம் அதை நிரூபித்தது. கூட்டத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன். 
கலைஞரால்  அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். தமிழகம் பெரிய அடையாளத்தை இழந்துவிட்டது. 50 ஆண்டில் பல்வேறு சூழ்ச்சி, துரோகங்களை தாண்டி கட்சியை காத்தவர் கலைஞர் . சிவாஜி, எம்ஜிஆர் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் கலைஞர் . மலைக்கள்ளன் படத்தின் மூலம் எம்ஜிஆரை ஸ்டார் ஆக்கியவர் கலைஞர் . சிவாஜியையும் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாராக்கியவர் இவர்தான் என்றார் ரஜினிகாந்த்

கருத்துகள் இல்லை: