வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

உச்சநீதிமன்றம் : முல்லை பெரியாறு நீரின் அளவை குறைக்க முடியாது .. பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை .. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Kerala Floods: Cant decrease the Mullaperiyar dam level from 142 ft orders, SC டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் கேரளாவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றுள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெரும் மழை பெய்து வருகிறது. இதனால் 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது.
 கேரளாவில் ஏற்கனவே வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுக்க கோரினார்.

ஆனால் தமிழக அரசு இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நீர் மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் இடுக்கியை சேர்ந்த ரசூல் ராயின் வழக்கு தொடுத்தார். அவசர வழக்காக நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதை விசாரித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் முடிவில் முல்லை பெரியாறு கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்க அளவு குறித்து விவாதிக்கப்பட்டு, இன்று உச்ச நீதிமன்றத்தில் அதுபற்றி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த அவசர வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து குறைக்க முடியாது. அணையின் உயரத்தை 139 அடியாக குறைக்க முடியாது. அணை பாதுகாப்பாக உள்ளது. இதனால் கேரளாவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றுள்ளது.

கருத்துகள் இல்லை: