

அப்போது, ’’ மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசு தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர்களுக்காக மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்’’ என அறிவித்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக பூண்டுலோயா நகரத்தின் டன்சின் தோட்டத்தில் மகாத்மா காந்திபுரம் என்கிற பெயரில் 404 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ”இந்தியாவினால் உறுதியளிக்கப்பட்ட வீடுகளில் இதுவரையிலும் 47,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. நான் கடந்த ஆண்டு மலையகத் தமிழர்களுக்கு அறிவித்த மேலும் 10 ஆயிரம் கட்டுவதற்கான உடன்படிக்கையில் இன்று இந்தியாவும் இலங்கையும் கையோப்பமிட்டுள்ளன. இலங்கை தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்’’என்று தெரிவித்தார்.
nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக