சக்தி .nakkheeran.in : கேரளவில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு
ஏற்பட்டதின் மூலம் மக்கள் உடமைகளையும் விட்டு விட்டு உயிர் பிழைத்தால்
போதும் என நினைத்து முகாம்களில் தங்கி வருகிறார்கள்.
அதோடு முன்னூறுக்கு மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் உயிர் இழந்தும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் தண்ணீரால் தத்தளித்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊத்துவது போல் முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் உள்ள கேரளா போலீசே அதிகப்படியான தண்ணீரை கேரளாவுக்கு திறந்து விடு என தமிழக அதிகாரிகளை மிரட்டி வருவது வாட்சப் மற்றும் பேஸ்புக்குகளில் காட்டு தீபோல் பரவிவருகிறது.
தமிழக கேரளா எல்லையான குமுளி தேக்கடியில் இருந்து 14 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது தான் கர்னல் பென்னிக் கட்டிய முல்லைப் பெரியாறு. இந்த முல்லைப்பெரியாறு அணையை தென் தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, ராம்ராடு, சிவகங்கை ஆகி பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதரத்திற்காக பென்னிக் கட்டி கொடுத்து இருக்கிறார்.
அதன்மூலம் தான் நான்கு மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அதனாலேயே அணையை நிர்வகிக்கும் பொருப்பு தமிழகத்துக்கே இருப்பதால் தமிழக அதிகாரிகள் தான் அணையில் தங்கி கொண்டு தண்ணீர் எடுத்து விட்டு வருகிறார்கள். ஆனால் அணை நமக்கு சொந்தம் என்பதால் அணையை பாதுகாப்பதற்கு முதலில் தமிழக போலீசார் தான் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அணை கேரளா மாநிலத்திற்குள் இருப்பதால் எங்க போலீசார் தான் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என கேரளா அரசு பல வருடங்களுக்கு முன்பு அடம்பிடித்து தமிழக போலீசாரை விளக்கி விட்டு 150 கேரளா போலீசாரை அணையை பாதுகாக்க நியமித்தனர்.
அதன் மூலம் கேரள போலீசாரும் இரண்டு சிப்ட் அடிப்படையில் அணையை பாதுகாத்து வருகிறார்கள். இப்படி பாதுகாப்பு பணியில் உள்ள கேரளா போலீசாருக்கு சம்பளம் தமிழக அரசு தான் கொடுத்து வருகிறது. இப்படி நம்ம கிட்ட சம்பளம் வாங்கினாலும் கூட நமக்கு விசுவாசமாக இருப்பதில்லை. கேரளாவுக்குதான் விசுவாசமாக இருந்து வருகிறார்கள் . அதனால் தான் தமிழக அரசும் மத்திய போலீஸ்சை அணை பாதுகாப்புக்கு போட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் தற்பொழுது பெய்து தொடர் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகமாக வருகிறது. அதுனால சுப்ரீம்கோர்ட் உத்திரவு படி அணையில் 142 அடிக்கு மேல் தண்ணீர் தேக்காமல் அந்த உபரி தண்ணீர் அணையில் இருந்து வெளியேறி வருகிறது. இப்படி வெளியேறும் தண்ணீர் வண்டிப்பெரியார் வழியாக இடுக்கி அணைக்கு செல்லும் ஏற்கனவே இடுக்கி அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதுனால முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142அடி வரை கொண்டு வர வேண்டாம். தற்பொழுது கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் இடுக்கி அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதுனால முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 138அடிக்குள் வைத்து கொள்ளுங்கள் என கேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அப்படி இருந்தும் கூட அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அதுனாலையே அணையில் இருந்து பைப் மூலமாகவும் இறைத்து பாலம்வழியாகவும் 2336கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு எடுக்கப்பட்டு வருவதின் மூலம் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.அப்படி இருந்தும் கூட உபரி தண்ணீர் கேரளாவுக்கு போய்கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் தான் அணையில் பாதுகாப்பு பணியில் இருந்து வரும் கேரளா போலீசான சலீம், திடீரென அணையில் இருக்கும் உதவி கோட்டப் பொறியாளர் சாம் இருபினிடம் சென்று கேரளாவுக்கு செல்லும் உபரி தண்ணீரை அதிகமா திறந்து விடு என வாக்கு வாத்தில் ஈடுபட்டு அடாவடி தனம் செய்துள்ளார். அப்படி இருந்தும் கூட தமிழக அதிகாரியான சாம்இருபினோ நீ எனக்கு கட்டளை போட கூடாது உன் வேலையை பார்த்துகிட்டுபோ என கூறியும் கூட சாம்இருபினே அந்த கேரள காக்கி மிரட்டி இருக்கிறார். இதனால் டென்ஷன் அடைந்த சாம்இருபின் இடுக்கி மாவட்ட கலெக்டரையும், தேனிமாவட்ட கலெக்டரையும் செல் மூலம் தொடர் கொண்டு அந்த கேரள போலீஸ் சலீம்மை பற்றி புகார் கூறி இருக்கிறார்.அதன் பின் தான் வாட்சப் மற்றும் பேஸ்புக்கிலும் தகவலை வெளிபடுப்படுத்தியிருக்கிறார். அதோடு முல்லைப் பெரியாறு அணையின் செய்பொறியாளர் சுப்பிரமணியும் கூட கேரள போலீசின் அடாவடியை தழிழக மற்றும் கேரளா அரசுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார். இச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக