வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கலைஞரை வேண்டுமென்றே கருணாநிதி கருணாநிதி என்று தினமணி தினமலர்.... காஞ்சி சங்கரன், ராசகோபாலாசாரி ...போன்றரை மட்டும்,,,,?

Savithri Kannan : இப்படி செய்ய என்ன காரணம் எனத் தெரியவில்லை? தி மு க செயற்குழு கூட்டத்தில் மு க ஸ்டாலின்,பேசியதை நான் மட்டுமல்ல, நிறைய பேர் தொலைகாட்சி நேரலைகளில்  பாத்திருக்க கூடும்.
அதில் ஸ்டாலின் உருக்கமாக,தன் தந்தையை கூறிப்பிடும் போதெல்லாம்’’ தலைவர் ’’என்றே விளிக்கிறார். ஆனால், இன்றைய தினமணியிலும்,தினமலரிலும் அவர் தலைவர் என விளித்த இடங்களில் எல்லாம்,’கருணாநிதி’ என மாற்றி போட்டுள்ளனர்.
தினமணியில்  நான் கவனித்த வகையில்,சுமார் 14 இடங்களில் தலைவர் என ஸ்டாலின் குறிப்பிட்டதை மெனக்கெட்டு பார்த்துப்,பார்த்து கவனமாக மாற்றியுள்ளனர்,
ஒரு நிருபரோ,ஆசிரியரோ தான் ஒரு செய்தியை கூறவருமிடத்து,கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளார்,அவ்வாறு கூறியுள்ளார் என எழுதினால் நாம் அதை குற்றம் காணமுடியாது. 
ஆனால்,மற்றொருவர் ஒன்றை கூறுமிடத்து,சம்பந்தபட்டவர் எவ்விதம் கூறிப்பிடுகிறாரோ,அதை, அவ்விதமே எழுதுவது தானே சரியாக இருக்க முடியும்? அதுவும் தன் தந்தையை ஸ்டாலின் எப்படி பெயர் சொல்லி அழைக்க முடியும் என தொலைகாட்சி நேரலையை பாக்காதவர்களும் யோசிக்க தானே செய்வார்கள்?
தினமணி,தினமலரில் சிறப்பு கட்டுரை எழுதும் நண்பர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி என்னிடம் கூறி வருத்தப்பட்டதுண்டு.

தங்கள் கட்டுரைகளில்,அவர்கள் அறிஞர் அண்ணா என்றோ, கலைஞர் என்றோ குறிப்பிட்ட இடத்திலெல்லாம் இந்தவிரு பத்திரிகைகளும் அண்ணாதுரை என்றும்,கருணாநிதி
என்றும் கவனமாக மாற்றி எழுதித் தான் பிரசுரிக்கிறார்கள்.ஆனால், ராஜகோபாலாச்சாரியார் என்று எழுதியிருந்தால் அதை கவனமாக ராஜாஜி என மாற்றிவிடுகிறார்கள் என்றனர்.அது ஒரு நீதிபதியால் எழுதப்பட்ட சிறப்பு கட்டுரையாக இருந்தால் கூட அதிலும் தங்கள் கைவண்ணத்தை இந்த பத்திரிகைகள் காட்டவே செய்கின்றர்.
.
காஞ்சி மடாதிபதி பற்றி இவ்விரு பத்திரிகையிலும் ஏதாவது செய்தி போடும் போது, ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று விளித்தே எழுதப்படுவதை நாம் பார்க்கலாம்.மற்றும் இவர்கள் உயர்வாக மதிக்கும் சாமியார்களை பற்றி எழுதும் பொழுதெல்லாம்,” பூஜ்ஜிய ஸ்ரீ “என்றெல்லாம் அடைமொழியிட்டு எழுதுவதில் மிகு கவனம் செலுத்துகிறார்கள்

கருத்துகள் இல்லை: