ஓரிரு நாட்களில் மாற்றப்பட உள்ள மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என, தெரிகிறது.
தமிழகத்தில்,
சசிகலா கும்பல் இல்லாத, அ.தி.மு.க., அணி உருவாக, பா.ஜ., விரும்பு கிறது.
முதல்வர் பழனிசாமி - பன்னீர் செல்வம் அணிகள் இணைந்ததும், அவர்களுக்கு,தொலை
பேசி மூலம், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித் ததே, அதற்கு சான்று.
டில்லிக்கு செல்லும் போது, இருவரும்,சர்வ சாதாரணமாக, பிரதமரை சந்திக்கும்
அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கம், அ.தி. மு.க.,வுக்கு விரைவில், அமைச்சரவையில் இடம் பெற்றுத் தரும் என,
தெரிகிறது.இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய
அமைச்சர் அருண் ஜெட்லி வசம், பாதுகாப்பு, நிதி ஆகிய இரு முக்கிய துறைகள்
உள்ளன. சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த அனில் தவே மறைவுக்குபின்,
அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், அத் துறையை கூடுத லாக கவனிக்கிறார்.
வெங்கையா நாயுடுவிடம் இருந்த, தகவல், ஒலிபரப்புத் துறை, ஜவுளித் துறை
அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கூடுதலாக உள்ளது.
நகர்ப்புற
வளர்ச்சித் துறையை,ஊரக வளர்ச்சி அமைச்சர் தோமர், கூடுதலாக கவனிக்கிறார்.
அத னால்,அமைச்சரவையில் மாற்றம் செய்யவேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.பா.ஜ.,தேசிய
தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் எட்டு பேருடன், நேற்று ஆலோசனை
நடத்தினார். பிரதமர் மோடி, செப்., 3ல், மத்திய ,அமைச்சரவையில், மாற்றம், அ.தி.மு.க.,வுக்கு, இடம் கிடைக்கும்?"
சீனா புறப்படும் முன், அமைச் சரவையில் மாற்றம்நிகழலாம்.அதில், அ.தி.
மு.க., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது. அது
நடந்தால், தமிழகத் திற்கு, ஒரு கேபினட் பதவி உறுதி.
இது தொடர் பாக ஏற்கனவே, பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வத்துடன் பிரதமர் ஆலோசித்து உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக