சனி, 2 செப்டம்பர், 2017

மாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன

செப்-2, கண்டன ஆர்ப்பாட்டம்
ரியலூர் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்  1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட்-ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால்,  நீட் தேர்வு எழுதினார். அதில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.
மோடி – எடப்பாடி குற்றவாளிகள்
இதனால் அவருடைய மருத்துவ வாய்ப்பு பறிபோய், இறுதியில் தற்போது தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.  இது தற்கொலையல்ல – படுகொலையே!  ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்த்த போதும், நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்துவிட்டன மோடி – எடப்பாடி கும்பல். இவர்கள் தான் அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்.
இந்தக் குற்றவாளிகளை உழைக்கும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டவும், தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களே! இளைஞர்களே! தொழிலாளர்களே! ஜனநாயக சக்திகளே! கொதித்தெழுந்து வாருங்கள்!
சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்: அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை,
செப்டம்பர் – 2, காலை 11 .30 மணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 9445112675
——————————————

விருதாச்சலத்தில் இன்று (செப்டெம்பர்-1) மாலை, ”நீட்: மாணவி அனிதா ’படுகொலை’, மோடியும் எடப்பாடியும் தான் குற்றவாளிகள்” என்ற முழகத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.’நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மோடியும் எடப்பாடியும் தான் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விருதாச்சலம் புமாஇமு ஆர்ப்பாட்டம்-1

விருதாச்சலம் புமாஇமு ஆர்ப்பாட்டம்-2
இதில் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த புமாஇமு தோழர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: