புதன், 30 ஆகஸ்ட், 2017

விவேகமும் ப்ளூ அண்ணாச்சியும் ! இருக்கும் கடவுள்கள் சுரண்டியது போதும் ! புது கடவுள் ஏன்? மழுங்கடிக்கவா?

thetimestamil :கார்த்திக் : யூடியூபில் எங்கு திரும்பினாலும் ப்ளூ சட்டை அண்ணாச்சியை வெளுக்கிறார்கள் அஜித் ரசிகர்கள் . அதுவும் சிறுவரிலிருந்து பெரியவர் வரை ஏன் பெண்கள் கூட ஸ்லீப்பர் செல் போல காணப்படுகின்றார்கள் . இவர்கள் தயாரிப்பாளர் போல வசூல் பற்றி எல்லாம் கதறுகிறார்கள் . நேற்று ஒரு சினிமா நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன் . 12 வருடமாய் உதவி இயக்குநர் நல்ல திறமையானவர் கடுமையான உழைப்பாளி . “அஜித் மட்டுமே தான் உழைக்கிராரா சினிமாவல ” என்றார் அஜித் சம்பளம் 50 கோடி என்றார் காசு வாங்கியதற்கு தானே வேலை செய்கிறார் . அஜித் ரசிகர்கள் படம் நல்லா இருக்கானு கேட்டா “தல கடுமையாக உழைத்து இருக்கிறார் ” என்கிறார்கள் . மூட்டை தூக்குபவனிலிருந்து எல்லாரும் தான் உழைக்கிறார்கள் . மேலே செல்ல செல்ல காசு அதிகமாகி உழைப்பு கம்மி ஆகிறது . இஃது அஜித்துக்கு தெரியாதா ?

இந்த விமர்சகர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. நோகாமல் நோம்பு தின்பவர்கள். படக்குழுவில் இருந்து காசு வரும். youtube ஹிட்ஸ் வரும் அதிலிருந்து காசு. சினிமா பற்றி ஆனா ஆவ்வண்ண தெரியாது. எடிட்டிங் கேமரா என்பார்கள் வேகமாய் போனால் நல்ல எடிட்டிங் கலராய் இருந்தால் நல்ல காமெரா அவ்வளவு தான் சொல்லத்தெரியும்.
ஒரு தேர்ந்த விமர்சகர் எல்லாம் யாரும் கிடையாது. சிலருக்கு சினிமா தெரிந்தாலும் காசு வேலை செய்துவிடும். விமர்சனம் தப்பு என்று சொல்லமாட்டேன் விமர்சிக்கிறவருக்கு சினிமா தெரியாமல் எப்படி விமர்சிக்க முடியும். இதை வேண்டுமானால் ரசிகனின் பார்வை என்று சொல்ல முடியுமா? விமர்சகன் என்றால் சினிமா தெரிய வேண்டும். ஒன்னும் தெரியாதவர்களை விமர்சகர்களாக ஆக்கியது நம் மக்கள் அப்போ உலக சினிமா வருமா என்ன விவேகம் மெர்சல் காற்று வெளியிடை போன்ற படங்களே வரும் .
ஹாலிவுட் தரம் என்கிறார்களே உண்மையில் ஹாலிவுட் தரமானதா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் தானே. ஹாலிவுட் தரமென்றால் விவேகம் தரமான படம் தான்.
மக்களுக்கு வேகம் தேவைப்படுகிறது. ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். யார் நமக்கு நெருக்கம் என்பதெல்லாம் கூட யோசிக்க நேரமில்லை. நிற்க நேரமில்லை, காதலிக்க நேரமில்லை, கவிதையை ரசிக்க நேரமில்லை, மக்கள் பிரச்சனை கேட்க நேரமில்லை. நான் நான் மட்டுமே போட்டோ எடுக்க கூட யாரையும் நம்புவதில்லை நாமே எடுப்போம். அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க எடிட்டர் ஒரு காட்சி கூட மனதில் நிற்காமல் எடிட் செய்கின்றார்.
காமெரா நிற்காமல் பறக்கிறது அஜித் சுட்டுக்கொண்டே இருக்கிறார். முதலாளித்துவம் சொல்வது போல் நீ உன்னை மட்டுமே நம்பு என்கின்றார். உலகிலேயே ஓரே உத்தமர் அவர். எல்லாருமே முதுகில் குத்துபவர்கள்… இந்த கருத்தை இந்த முதலாளித்துவ கருத்தை சொல்வதால் தான் அஜித் இமேஜ் மக்களிடம் செல்லுபடியாகிறது.
எல்லாரும் தான் நல்லவர் மற்றவர்கள் முதுகில் குத்துபவர்கள் என்று நம்புகிறார்கள். அஜித் படங்களில் தொடர்நது தனி நபர் உழைப்பு யாரையுமே நம்பாதது முதுகில் குத்துவது தொடர்ந்து வருகிறது மக்களின் செல்ல பிள்ளை ஆகிறார்.
அதனால் ப்ளூ சட்டை ஆள் மீது வன்மத்தை காட்டுகிறார்கள். இது மன நோய். ஒரு நாயகனுக்கு கொடி தூக்குவது மன நோய். நானும் பைத்தியமாய் இருந்து தெளிந்தவன் தான். படத்தை ரசியுங்கள் வழிபடாதீர்கள்.
இருக்கும் கடவுள்கள் போதும் மக்களை சுரண்ட புது கடவுள் எதற்கு மக்களை மழுங்கடிக்கவா?
கார்த்திக், யூ ட்யூப் விமர்சகர்.
https://www.youtube.com/user/karthiparthi

கருத்துகள் இல்லை: