வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தோழர் தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர்
தமிழ்த்தேசியத் தலைவர் தோழர் தமிழரசன் அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல், மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு.< கோவையில் B.E. ( Chemical Eng) வேதியியல் பொறியியல் படித்தார்.
இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (மா. லெ)-ன் மாபெரும் போராளி ' சாரு மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மா.லெ இயக்கத்தின் மாபெரும் முன்னோடி A.M.K என்கிற கோதண்டராமன் அவர்களுடன் இணைந்து ”மக்கள் போர்க்குழு” உறுப்பினராகப் பணியாற்றினார்.
தோழர் தமிழரசன் அவர்களின் புரட்சிகர செயல்பாடுகளை கண்காணித்த அரசு அவரது செயல் பாடுகளை தடுத்து நிறுத்த 1975-ல் அரியலூரில் கைது செய்து சிறையில் அடைத்தது.


சிறையிலிருந்து தப்ப பலமுறை முயன்று ஒவ்வொரு முறையும் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.
1984-ல் 9 ஆண்டு சிறை வாழ்வை முடித்துக் கொண்டு வெளிவந்த அவர் மீண்டும் A.M.K (எ) கோதண்டராமனுடன் தொடர்பு கொண்டார்.
அவருடன் இந்திய முதலாளித்துவ ஆதிக்க சக்திகளிடமிருந்து பாட்டளிவர்க்க தலைமையிலான அரசை நிறுவ போராடிவந்த அரசியல் நிலையிலிருந்து விடுபட்டு
தமிழ்தேசிய விடுதலை குறித்து தொடர்ந்து விவாதித்து வந்தார்.
உடன்பாடு ஏற்படாத சூழலில்.....
1985-ஆம் ஆண்டு மே திங்கள் 15,16-ஆகியன தமிழக வரலாற்றில் மிக முகாமையான நாள்கள்.
தென்னார்க்காடு மாவட்டம் பெண்ணாடத்தில் :
தமிழீழ ஆதரவு மாநாடும்,
இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை”
எனும் தலைப்பில் நடத்தப்பட்ட மாநாடு
தமிழக பொதுமையர் மட்டத்தில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அதுவரை இந்தியா என்பதை ஒரு நாடாகக் கருதி இந்திய அளவில் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டி புரட்சிக்காக இழவு காத்திருந்தனவாகவே கட்சிகள் இருந்தன.
பின்னாளில் தேர்தல் பாதையில் சீரழிந்துபோன இ.பொ.க.மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சிகள் போலவே இ.பொ.க.(மா.இலெ) கட்சிகளும் இந்தியா என்பதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தன.
இந்தியாவில் சனநாயகப் புரட்சி நடத்த வேண்டுமாக இழவு காத்திருந்தன.
பரந்துபட்ட மக்களுக்கும், நிலபிரபுத்துவத்துக்கும் இடைப்பட்ட முரண்பாடே முதன்மை முரண்பாடு என பறைசாற்றின.
இந்தியா ஒரு அரைக்காலனிய அரை நிலபிரபுத்துவ சமூக அமைப்புடையதாகச்
சீனப் பொதுவுடைமைக் கட்சி சீனாவை வகுத்த வகைப்பாட்டையே அடிபிறழாமல் படித்து எழுதிக்கொண்டன.
இந்தியக் கட்சி என்பது பார்ப்பனியத் தன்மையுடையது என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள மறுத்தனர்.
காஷ்மீர், நாகலாந்து, குஜராத், தமிழ் நாடு என இந்தியாவின் நான்கு முனைகளுக்குள்ளும் அடைக்கப்பட்டு இருந்த வேறுபாடுபட்ட சமூக அமைப்புகள் எப்படி ஒன்று போனறதானது என்பதை விளங்குவது கடினமா என்ன? என்ற தேசிய இன சிக்கல் குறித்து வினா எழுப்பினார் தோழர் தமிழரசன்.
இந்தியாவைத் தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்ற தோழர் தமிழரசன் அவர்களின் கூற்றை இ.பொ.க. (ம.இலெ) ஒரு முனையில் ஒத்துக்கொண்டாலும், சிறைக்கூடத்திலிருந்து தேசிய இனங்களை விடுதலை செய்ய வேண்டும் எனும் நோக்கத்திற்கு பொருப்பற்றவர்களாகவே இ.பொ.க. (ம.இலெ) வினவர் இருந்தனர். இருக்கின்றனர்.
அதைவிடக் கொடுமை, இந்தியச் சிறைக் கூடத்திலிருந்து தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடுகிறவர்கள் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் என்பதாக வேறு இழித்துரைத்தனர்.
அவர்களின் இத்தகைய வறட்டுப் போக்கை உடைத்துக்கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்தை மார்க்சிய-லெனினிய-மாவோவியக் கோட்பாட்டு வழியில் முன்னேடுத்ததுதான் தலைவர் தமிழரசனின் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி
(த.பொ.க) -வாக உருப்பெறுவதற்கு முன்னதாக இ.பொ.க.(மா.இலெ) மக்கள் போர்க்குழுவிற்குள் தமிழ்த்தேச விடுதலையை முன்னெடுக்க வேண்டும் என்றும், தமிழக அளவில் கட்சி கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராடியவர்களே தோழர்கள் தமிழரசன், புலவர் கலியப்பெருமாள் உள்ளிட்ட தோழர்கள்.
கட்சிக்குள் அவர்கள் முன்வைத்த அரசியல் அறிக்கையை ஏற்காமல் புறக்கணித்தது இ.பொ.க.(மா.இலெ) மக்கள் போர்க்குழு
எனவே புறக்கணிக்கப்பட்ட அறிக்கையோடு, தங்கள் நிலைப்பாட்டை வெகு மக்களுக்கு அறிவிக்கவே பெண்ணாடம் மாநாட்டைத் தோழர்கள் நடத்தினர்.
சிறைக்குள்ளிருந்து புலவர் கலியப்பெருமாள் வந்தவுடன் தலைவர் தமிழரசன் அவர்களின் தலைமையில் கூட்டப்பட்ட குழுவினர் ஆய்விலேயே பெண்ணாடம் மாநாட்டிற்கென அறிக்கை உருவாக்கப்பட்டது.
அவ்வாறு உருவாக்கப்பட்டு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அறிக்கையே இந்த அறிக்கை.
தேசிய இன விடுதலையை வலியுறுத்தி மா.இலெ இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட முதல் அறிக்கை இது . த.பொ.க.உருக் கொள்ள அடித்தளமான அறிக்கையாகவும் இந்த அறிக்கை இருந்தது என்பது அதற்குரிய இன்னொரு சிறப்பு.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இந்த மாநாடு முதலாளியச் சிந்தனையாளர்களால் நடத்தப்பட்ட மாநாடு என்பதாகவும், பிற்போக்கானது என்பதாகவும் பலரும் குறிப்பாக இ.பொ.க.(மா.இலெ) வினர் இழித்துரைத்தனர்.
மக்கள் போர்க் குழுவின் சார்புடைய முற்போக்கு இளைஞர் அணி, முபோக்கு மாணவர் சங்கத்தினர் மாநாட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ததும், முதலாளியச் சார்பினரின் மாநாடு இது எனச் சுவரோட்டி ஒட்டிப் பரப்பியதுமான எதிர்ப்புகளை அந்த மாநாடு சந்தித்தது.
“தேசிய இனங்களின் விடுதலையை முதன்மையாகவைத்துப் போராடுவது நிச்சயம் பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமைக்குப் பதிலாகப் பாட்டாளி மக்களைக் கூறு போடவே உதவும், ஒருவருக்கொருவர் பகைமையாகச் சண்டையிட்டுக் கொண்டு வர்க்கப் போராட்டத்திற்கு மாபெரும் குந்தகத்தை விளைவிக்கும், நிச்சயமற்ற முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தித் தீர்வுக்கு வழிவகுக்காமல் மழுங்கடிக்கவும், திசைதிருப்பவுமே பயன்படும் என்பதாக இ.பொ.க.மா.இலெ (தமிழ் மாநில அமைப்பின்) இதழான புரட்சி புயல் (மே-சூலை 1984) அப்போது கருத்து வெளியிட்டது.
ஆக இத்துணை எதிர்ப்புகளுக்கிடையில் நடத்தப்பட்ட முகாமை மாநாட்டின் அறிக்கை, கால அரசியலில் அறிதலுக்குரிய தேவையைக் கொண்டது.
மாநாட்டிற்கு பின்னர் சிலகாலம் கழித்து எதிர்த்தவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டும் தலைவர் தமிழரசன் அவர்களின் கருத்துகளோடு ஒத்துப்போயினர்.
தோழர் தமிழரசன் அவர்களின் அரசியல் பார்வையில் சில செய்திகள் அப்போதைய காலத்தின் சூழலை விளக்குவதாயும், சில கட்சிகளின் அப்போதைய நிலைப்பாட்டையும், இப்போதைய நழுவலையும் அறிவதாயும் இருக்கிறது.
ஆக காலத்தால் பழையது எனினும் அரசியலால் இக்காலத் தேவைக்குரியதாகவே தோழர் தமிழரசன் அவர்களின் பெண்ணாடம் மாநாட்டு அரசியல் அறிக்கை இருக்கிறது.
தமிழ்த் தேச அளவிலான அரசியல் அமைப்பில் கூர்மைப் படுவதற்கான முயற்சிக்கு இந்த அறிக்கை முழுமையாகத் துணை செய்யும்.
எனவே ஆக்க வழிப்பட்ட அரசியல் ஆய்வுக்கான ஆவணமாக இதை அனைவரும் படிக்க வேண்டும்.

மாநாட்டுக்குப் பின்

இ.பொ.க (மா.லெ) அமைப்பிலிருந்து தமிழ்நாடு கிளை அமைப்பினர் வெளியேற்றப்பட்டனர்.
திருச்சி – தென்னார்காடு உள்ளிட்ட சில மாவட்ட மா.லெ தோழர்கள் 64 பேர் கொல்லிமலையில் கூடினர். அக்கூட்டத்தில் தாங்கள் இனி தனித்து இயங்குவது என முடிவு செய்தனர். கூட்டத்திற்கான அனைத்து முன்முயற்சிகளையும் தோழர் தமிழரசன், சுந்தரம், புதுவை தமிழ்ச்செல்வம், தர்மலிங்கம் போன்றோர் செய்தனர்.
இப்படியாக மா.லெ இயக்கத்திற்குள்ளான அரசியல் நிலையிலிருந்து மாறுபட்டு தேசிய இன விடுதலை அரசியலை முன்வைத்து தேசிய இனங்களின் விடுதலையை அமைப்பு வடிவிலான மாற்றத்தை முதலில் எற்படுத்தியது தோழர் தலைவர் தமிழரசன் தலைமையே.
பெண்ணாடம் மாநாட்டு அறிக்கையின் சில குறிப்புகள்.....

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குச் சரியான தீர்வு தமீழீழ நாடு

பெறுவதே!

தமிழீழ நாடு பெறுவது ஆயுதப் போராட்டத்தின் மூலமே!

இலங்கைத் தமிழர்கள் தனிநாடு கேட்கக் கூடாதென்னும் இந்திராவின் திட்டம் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் வஞ்சகமே!

இந்திரா காங்கிரஸ் கட்சியினர் –தனிநாடு- கோரிக்கையை ஆதரிக்கவில்லை.

இந்திரா காந்தி, சிங்கள இனவெறி அரசின் கீழேயே பிரதேசக்கவுன்சில் அமைத்துக்கொள்ள ஒரு சமரசத் திட்டத்தை தூதுவர் மூலம் உருவாக்கியுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்டு ஈழத்தமிழர்களின் நலன்களை அடகுவைக்க அமிர்தலிங்கமும் தயாராகியுள்ளார்.
இங்குள்ள ஊராட்சிகள், நகராட்சிகள் போன்றுதான் அந்தப் பிரதேசக் கவுன்சில்.
எனவே இது வெறும் பித்தலாட்டமே.

ஜனதா போன்ற கட்சிகளின் நிலையும் ஏறக்குறைய இதுவே.

தமிழகத்தில் அ.தி.மு.க “தனிநாடு” கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. இப் பிரச்சனையைத் தட்டிக்கழிக்கப் பார்க்கிறது.

தி.மு.க தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கிறது. ஆனால் தனிநாடு பெற இந்தியப் படையை அனுப்ப வேண்டும் என்கிறது. தனிநாடு கேட்கக்கூடாது என்கின்ற டில்லி அரசு எப்படிப் படையை அனுப்பும்?

இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி தேசிய இன விடுதலைக்கு எதிராக நாட்டின் ஒருமைப்பாடு என்ற முழக்கத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் தேசிய இன விடுதலைக்கு எதிரானவர்களே.

இன்று இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தியாவில் தமிழ்த் தேசிய இனம் உட்பட பிற தேசிய இன விடுதலைக்குத் துரோகம் இழைக்கவே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையிடுகின்றன.

இலங்கைத் தமிழரின் மீதான ஒடுக்குமுறையும் இலங்கைத் தமிழர்களின் விடுதலை எழுச்சியும் தமிழ்த் தேசிய இனமக்களிடையே விடுதலை எழுச்சியை மேலும் விரைவுபடுத்திவிடும் என்ற இந்திய ஆளும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன.

இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையைக் கொஞ்ச காலத்திற்கு ஒத்திப்போடவே இலங்கைத் தமிழின விடுதலைக்கு எதிராக இந்திய பிரதமர் சமரசம் பண்ணப்பார்க்கிறார்.

“ஒரே இந்தியா” என்ற செயற்கை எல்லைக்குள் வெடித்துச் சீறும் சமூக முரண்பாடுகள் புதிய வடிவங்களையும், போராட்டத்திற்கான புதிய எல்லைகளையும் வகுக்கின்றன.

இந்திய ஒடுக்குமுறை அரசுக்கும், தேசிய இனங்களுக்கிடையிலான அடிப்படையான முரண்பாடும் கூர்மையடைந்து வருகிறது.

வெல்க தமிழீழப் போராட்டம்!

இந்தியாவின் அனைத்துத் தேசிய இனங்களின்

தனி நாட்டுரிமைக்காகாப் போராடுவோம்!
அந்தக் காலகட்டத்திலேயே தேசிய இனச் சிக்கலையும் தேசிய இன விடுதலையையும் தோழர் தமிழரசன் அவர்கள் நுனுக்கமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
ஒருபோதும் தமிழீழ விடுதலைக்கு இந்தியம் ஆதரவளிக்காது, எதிராகவே செயல்படும் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்து அறிவித்துள்ளார்.
அந்த உண்மையை நாம் இன்றைய நிகழ்வுகலோடு பொருத்தி பார்த்துக் கொள்ளமுடியும்.
தமிழ்த்தேசிய விடுதலையை, தமிழீழ விடுதலையை விரும்புகிறவர்கள் தோழர் தமிழரசன் அவர்களின் பெண்ணாடம் மாநாட்டின் அறிக்கையை புறந்தள்ள முடியாது.
====
இதைத் தொடர்ந்து
1985-ல் மீன்சுருட்டியில் ”தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்” நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” எனும் பொருள்பட ஓர் அறிக்கையை தமிழரசன் முன்வைத்தார்.
டெல்லியில் நடந்த அகில இந்திய அளவிலான மா.லெ குழுக்களின் ஓர் கருத்தரங்கில் தமிழரசன் அவர்கள் தலைவராக அங்கம் வகித்த "தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி" சார்பாக தமிழகத்திலிருந்து தோழர் புதுவை தமிழ்ச்செல்வன், புலவர் கலியபெருமாள் இருவரும் கலந்து கொண்டனர்.
மேலும் தோழர் தமிழரசன் ”தமிழ்நாடு விடுதலைப் படை” என்னும் பெயரில் படை கட்டியும் இயங்கத் தொடங்கினார். மற்றும் இளைஞர் இயக்கம், மாணவர்பேரவை என மக்கள் திரள் அமைப்புகள் கட்டி
சாதி ஒழிப்பிற்கான தேவை குறித்தும் தமிழக விடுதலை குறித்தும் தமிழகம் முழுக்கச் சுற்றி பல்வேறு தோழர்களையும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.
தமிழக விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும் ஆயுதமேந்தும் அரசியல் குறித்து கருத்துப் பரப்புரையும், செயல் திட்டங்களையும் வகுத்துச் செயல்பட்டார். புதிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சாதி ஒழிப்பு ஒரு முகாமையான பங்கை வகிக்கின்றது என்பதை முன்வைத்து செயலாற்றினார்.
பல்வேறு போராட்டங்களை கருவியேந்துதல் வழி செயல்படுத்திய தமிழரசன் தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி ஆற்று நீர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டி ஒரு திட்டம் தீட்டினார்.
அதை செயல்படுத்த தேவைப்படும் பொருளியல் ஈட்டல் நடவடிக்கை மேற்கொண்டபோது பொன்பரப்பியில் உளவுத்துறையின் சதியால் காவல் துறையால் வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டார். தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
தோழர் தமிழரசன் அவர்கள் மறைவிற்குப்பின் தோழர் பொழிலன் உள்ளிட்ட சில தோழர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை என மீண்டும் செயல்பட முயற்ச்சித்னர்..பல பின்னடைவிற்குபின்
தோழர் தமிழரசன் அவர்களின் அரசியல் வழியில் மக்கள் திரள் அமைப்பின் மூலம் அரசியலை முன்னெடுத்துச் சென்றார்கள்.
தமிழக மக்கள் விடுதலைக்கான போரில் தனது உயிரை ஈந்த தோழர் தமிழரசன் உள்ளிட்ட தோழர்களின் முகாமைக் குறிக்கோளான தமிழ்தேசிய விடுதலைப் போரட்ட அரசியலில் சாதி ஒழிப்பிற்கான திட்டத்தையும் அரசியலையும் இணைத்தே தமிழ்த்தேச விடுதலையை வென்றெடுக்க முடியும் என்னும் அவர்களின் அரசியல் எத்துனை முகான்மையானது என்பதை இன்றைய தமிழக சமூகச் சிக்கல்களிலிருந்து நாம் உண்ர்ந்து கொள்ள முடியும்!

சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்

என்ற மீன்சுருட்டி மாநாட்டின் அறிக்கையின் சிறப்பு மிகு பதிவுகள்

பிற்போக்கு வாதிகளின் மதவெறி, சாதிவெறி, பிரித்தொதுக்கும் முயற்சிகளை முறியடிப்போம்.

உழைக்கும் மக்களைச் சாதி ஒழிப்பின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவோம்.

வறட்டுவாதிகளின் சீர்திருத்தவாதிகளின் தவறான அணுகுமுறைகளை முறியடித்து சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா!

தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடமே சேரிகள்!

இத்தகு அடிப்படை ஆவணங்களை வரலாற்றுத் தொடர்ச்சியாகப் பயில்வதும் பரப்புவதும் சமூக மாற்றத்திற்கு விழைவோரின் கடமையாதல் வேண்டும்.
சாதி ஒழிப்பும் தமிழக விடுதலையுமான இந்த ஆவண அறிக்கை தமிழகப் புரட்சி நோக்கினர் அனைவரும் படித்தறியப்பட வேண்டிய அடிப்படை ஆவணமாகும்
சாதி ஒழிப்பை எளிதான செய்தியாகப் புறந்தள்ளியவர்களுக்குச் சாட்டையடியாக விழுந்த அரசியல் போர் வாள் இது.

தமிழ்த்தேசியராய் ஒன்றிணைவோம்!
தமிழ்த்தேசியக்குடியரசை வென்றெடுப்போம்!

கருத்துகள் இல்லை: