தமிழக மாநில தலைவராகிறாரா நிர்மலா சீத்தாராமன்?
மத்திய இணை அமைச்சர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பாஜகவில் உள்ள மூத்த மத்திய அமைச்சர்கள் எல்லாம் தொடர்ந்து தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் ராஜினாமா செய்த மூத்த அமைச்சர்களுக்கு மாநில தலைவர்கள் பதவி வழங்கப்பட இருக்கிறது. அதில் மத்திய இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீத்தாராமன் தற்போது ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பா.ஜ.கவின் தமிழக மாநிலத் தலைவராக பதவி வகித்து வரும் தமிழிசை செளந்தர்ராஜனை அந்த பதவியில் இருந்து விலக்கிவிட்டு நிர்மலா சித்தாராமனுக்கு தமிழக மாநிலத் தலைவர் பதவி அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து சனி அல்லது ஞாயிறு அன்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் மோடியின் சீன பயணத்திற்கு முன்பே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. - ஜீவா பாரதி நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக