புதுடில்லி: ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகள் குறித்து போர்ப்ஸ் நாளிதழ்
நடத்திய ஆய்வில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.ஆசிய பசிபிக் நாடுகளில்
ஊழல் குறித்து வெளிப்படை தன்மைக்கான சர்வதேச அமைப்பு ஒன்று ஆய்வு
நடத்தியது. 16 நாடுகளில் இருந்து 20 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகளை தற்போது போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், ஊழல் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன.இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பள்ளி, மருத்துவமனை, அடையாள அட்டை ஆவணங்கள் பெற, போலீஸ் மற்றும் சேவை பணிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளில் லஞ்சம் கொடுப்பதாக 58 சதவீதம் பேரும், சுகாதார திட்டத்திற்கு 59 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். அதேநேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருவதாக 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 41 சதவீதம் பேர் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக