செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி பதவி விலகல் ... பி ஹெச்.பாண்டியனின் மகன் அரவிந்த் பாண்டி புதிய தலைமை ...


பன்னீர் அணியை சேர்ந்த பி.ஹெச். பாண்டியன் தனது மகனான அரவிந்த் பாண்டியனுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியைக் கேட்கிறார். அவருக்கு வழி விடும் வகையிலேயே முத்துகுமாராசாமி ராஜினாமா செய்திருக்கிறார்’’
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரான முத்துக்குமாரசாமி இன்று (ஆகஸ்ட் 29) தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி... அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் அரசின் சார்பில் முக்கியப் பங்காற்றினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் முக்கிய வழக்குகளில் பங்கு பெறவில்லை என்கின்றனர் நீதிமன்ற வட்டாரங்களில்.
இந்நிலையில் இன்று தமிழக அரசுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், எழுபது வயது ஆகும் தனக்கு உடல் நலம் ஒத்துழைக்காததால் தலைமை அரசு வழக்கறிஞர் பணியில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த ராஜினாமா கேட்டு வாங்கப்பட்டது என்ற குரலும் நீதிமன்றத்தில் ஒலிக்கிறது. “பன்னீர், எடப்பாடி அணிகள் இணைந்த நிலையில் இப்போது தினகரன் அணியினர் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்துவருகின்றனர். இந்நிலையில் பன்னீர் அணிக்குள், ‘பன்னீர் மட்டும் பதவிபெற்றுவிட்டார். மற்றவர்களுக்கு எந்தப் பதவியும் இல்லை’ என்ற கொந்தளிப்பு இருக்கிறது. இதைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி, அரசின் முக்கியப் பதவிகளில் பன்னீர் அணியினருக்கும் இடம் தர முடிவு செய்து அதன்படி சில காய்கள் நகர்த்தப்படுகின்றன. அந்த வகையில் பன்னீர் அணியை சேர்ந்த பி.ஹெச். பாண்டியன் தனது மகனான அரவிந்த் பாண்டியனுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியைக் கேட்கிறார். அவருக்கு வழி விடும் வகையிலேயே முத்துகுமாராசாமி ராஜினாமா செய்திருக்கிறார்’’ என்கிறார்கள் நம்மிடம் பேசிய சில வழக்கறிஞர்கள்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: