
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு குறித்து திரையுலகினர் தெரிவித்திருப்பதாவது:
நடிகர் கமலஹாசன், கோபப்படுவதற்கு அக்ஷராவோ, ஸ்ருதியோ மட்டும் எனக்கு மகளாக இருக்க வேண்டியதில்லை. அனிதாவும் எனக்கு மகள்தான். மாணவி அனிதா மரணத்தைப் போல் இனியும் நடக்காமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், அனிதாவுக்கு ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய தீவிர முடிவை அவர் எடுப்பதற்கு முன்னால் அவரை ஆட்கொண்ட வலி மற்றும் வேதனையை என் இதயம் உணர முடிகிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன், இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது... என் தங்கைக்குக் கண்ணீர் அஞ்சலி என்றும்,
நடிகர் விஜய் சேதுபதி, துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என் சகோதரி அனிதாவின் பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்... இதுவும் அரசியலா? என்றும்,
நடிகர் விவேக், உன் குடும்பத்தைத் தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்? இதற்கு மேல் என்ன படிக்க? ஓர் அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது என்றும்,
நடிகர் சூரி, படிப்பை இழந்தது நீயல்ல... இந்த தேசம்தான் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது. கண்ணீர் அஞ்சலி தங்கையே... என்றும் நடிகர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறீர்கள்? 1176/1200 எடுத்தவள் வாழ்க்கை 0/18 பதினெட்டில் சூனியம் ஆகிவிட்டது. எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா!!! வயிறு எரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.இயக்குநர் சமுத்திரக்கனி, என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராம், நீட் ஓர் அரச பயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம் என்று பதிவிட்டதோடு தனது புரொபைல் பிக்சரையும் இரங்கல் நிறமாக்கியுள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி, டாக்டர் அனிதா தங்கையே... உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி என்றும்,
இயக்குநர் ரஞ்சித், ஒரு தலைமுறையின் பெருங்கனவைச் சிதைத்த சமூக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும்... என்றும்,
இயக்குநர் பாண்டிராஜ், Rip போடுற வயசா இது? வேதனைப்பட வேண்டிய விஷயம் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம். எப்போ கல்வி வியாபாரம். ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு! என்றும் இயக்குநர்கள் தங்களது வலியை பதிவிட்டுள்ளனர்.
கவிஞர் பழநிபாரதி,

ஒவ்வொன்றாக
ஒன்றின் மேல் ஒன்றாக
பிணங்களை
அடுக்கி
அடுக்கி
அதன் மேல் நின்று
அனிதாவின் ரத்தம்
தெறிக்க
தெறிக்க
ஆகாயத்தில் எழுதுவோம்
இந்த
ஆட்சியின் சாதனைகளை
எனத் தன் வலிகளை கவிதை வடிவில் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டதோடு, அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் மருத்துவமனைக்குச் சென்று விட்டார். மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக