அவரது மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறைதான் மாணவியின் உயிரைப் பறித்ததாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல் மனவலிமையோடு இருக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு சட்டரீதியாக எடுத்த முடிவுக்கு துணை நின்றவர் மாணவி அனிதா. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சி செய்தது’ என்றார்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தினார். அனிதாவின் தற்கொலையை நினைவில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார். மாணவி அனிதா உயிர்தியாகம் செய்திப்பதாகவும், அவரது தற்கொலைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார் மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக