வெள்ளி, 1 செப்டம்பர், 2017

நெட்டிசன்கள் அராஜகம்! உயிரோடு கொளுத்துங்கள்:

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நரேந்திர மோடி அவர்கள் பேசிய எத்தனையோ பேச்சுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் மிக முக்கியமான ஒன்று கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ‘டிமானிடைசேஷன்’ எனும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டத்தை அமல்படுத்திய பிறகு, கோவாவின் மோபா நகரில் கிரீன்ஃபீல்டு விமான நிலையத்துகு அடிக்கல் நடும் விழாவுக்கு வந்தபோது பேசிய பேச்சு.

உயிரோடு கொளுத்துங்கள்: நெட்டிசன்கள் அராஜகம்!எனக்கு 50 நாட்கள் அவகாசம் கொடுங்கள். 10 மாதங்களாக வேலை செய்து, திடீரென அமல்படுத்தியிருக்கும் இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் என்னை உயிரோடு கொளுத்திவிடுங்கள் என அவர் பேசிய பேச்சு அதுவரை அவரை நம்பாதவர்களைக்கூட ‘உயிரையே கொடுக்கத் துணிந்துவிட்ட பிரதமரை சந்தேகப்பட்டுவிட்டோமே’ என மனவருத்தம் கொள்ளச் செய்தது.
50 நாட்களுக்குப் பிறகும் டிமானிடைசேஷனால் எவ்வித கறுப்புப் பணமும் பிடிபடவில்லை என்ற பேச்சு ஆங்காங்கே எழுந்தாலும், அதற்கு பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா(RBI) வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி டிமானடைசேஷன் மூலம் புழக்கத்திலிருந்த பணத்தில் 99% பணம் திரும்ப வந்திருப்பதை அறிந்துகொண்டதால், கோவாவில் பிரதமர் பேசியதைத் தற்போது கையிலெடுத்துக்கொண்டனர்.

#BurnMeAlive என்ற ஹேஷ்டேக் மூலம், தங்களால் செய்யமுடியாதவை அனைத்தையும் பட்டியலிட்டு வருகின்றனர். உதாரணத்துக்கு மனைவியிடம் இனி நான் பொய் சொன்னா BurnMeAlive என்பது போன்ற போஸ்டுகளால் அதகளப்பட்டு வருகின்றன சமூக வலைதளங்கள். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: