![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8-wN1noOwZQK-lqgUE55j17q4IioxYv0BVTBF1i1Nl_Qk-neji9phS0s6OC1Aka2TQEsv8wKqzqC6y7VnnknYnkH3TuJgNB2JodgHNwWdL-YMW0coBRJOAPEU4Xcl_d8C63lEnyytAh8E/s320/1508504246g.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaQXMSD_50pw_3IvIewf31h9v2Lbx693She_76siDPDL8FWLvXFc_At4fSuDRtG13tUa199MoL_SnDbh99zJyWBtVMLktFJ5SWK42Oj_P1iKrnn0gHkrFahHCtbIPeGZsdSj3cIQaKSTnm/s400/1508504246e.jpg)
தினகரன்" "சென்னை: ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல் என பாஜக தேசிய செயலாளர்
எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் விஜய் மெர்சல் திரைப்படத்தில்
ஜிஎஸ்டிக்கு எதிராக வசனங்கள் உள்ளதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி
வருகின்றனர். மேலும் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என தமிழிசை,
பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக
தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என மெர்சலில் கூறியுள்ளது
பொய் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவில்
பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம் என்றும் ஜோசஃப் விஜய்யின் மோடி
வெறுப்பே மெர்சல் என்றும் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக