திங்கள், 16 அக்டோபர், 2017

ஆறுமுக நாவலரின் "இந்து-‌ ஷ‌ரியா ச‌ட்ட‌ம்"! வெள்ளாள ஆதிக்க .. சைவ வினா விடை!

kalaimarx : ம‌ல‌ங் க‌ழிப்ப‌து எப்ப‌டி? ஆறுமுக‌நாவ‌லர்,
யாழ் சைவ‌ வெள்ளாள‌ருக்காக‌ எழுதிய‌‌ "இந்து-‌ ஷ‌ரியா ச‌ட்ட‌ம்"! சைவ‌ ச‌ம‌யிக‌ள் அனைவ‌ரும் ப‌டித்துப் ப‌ய‌ன் பெறுக‌.
இங்கே ஆறுமுக‌ நாவ‌ல‌ர் குறிப்பிட்ட‌து ம‌னித‌ ம‌ல‌ம் அல்ல‌, அது "ஆன்மீக‌ ம‌ல‌ம்" என்று, இத‌ற்கும் த‌த்தவார்த்த‌‌ விள‌க்க‌ம் கொடுக்க‌ சில‌ர் வ‌ருவார்க‌ள்.
// 6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?
பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.
7. எப்படி இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்?
தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.
சௌசம்
8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.

9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?
மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.//
(ஆதார‌ம்: சைவ‌ வினா விடை)

கருத்துகள் இல்லை: