தினமலர் :சென்னை: 'சட்டசபையில், மெஜாரிட்டி நிரூபித்த ஆட்சி, ஐந்து ஆண்டுகள் கழித்தே மக்களிடம் செல்ல வேண்டும் என பேசியுள்ள, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் பேச்சு குறித்து, சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: பார்லிமென்ட் பணிகளில், பழுத்த அனுபவம் பெற்றவர், துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடு. இவர், சென்னை, ராஜ்பவனில் நடந்த விழாவில் பேசினார்.
அப்போது, 'ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, இந்த அரசுக்கு இருக்கிறது. ஒரு ஆட்சி, சட்டசபையில், மெஜாரிட்டியை நிரூபித்து விட்டால்,
ஐந்து ஆண்டுகள் கழித்தே, மக்களிடம் செல்ல வேண்டும். அரசியல் சட்டத்தை மீறி,
கவர்னர் நடக்க வேண்டும் என, நாம் எதிர்பார்க்க முடியாது' என, குறிப்பிட்டுள்ளார்.துணை ஜனாதிபதி, அரசியல் பேசியிருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றது தானா என்பதை, அவரே சுய பரிசோதனை செய்து கொள்வார் என, நம்புகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக