செவ்வாய், 17 அக்டோபர், 2017

சங்க இலக்கியத்தில் காமம் என்பது காதலை , அன்பை மட்டுமே குறிக்கின்றது

Lulu Deva Jamla : பெண்கள் சக பெண்களை வலிமையாக்க வேண்டுமே தவிர்த்து அவர்களின் நடவடிக்கைகளின் ஒழுக்கங்களைப் பற்றி, எழுத்துகளின் தரத்தை வகைப்படுத்த கூடாது , எது பெண்ணியம் என்ற ஆராய்ச்சி தேவையற்றது, ஒரு பெண் என்ன செய்ய விரும்புகிறாளோ அதைச் செய்யும் உரிமை அவளுக்கு தேவை,
அது சமூகம் கற்பிக்கப்பட்ட ஒழுக்கங்களுக்குள் வருமா என ஆராய்வது அல்லது பெண்ணிய வரையறைக்குள் வருமா என கேள்வி எழுப்புவது ஒரு பலனையும் தரப்போவதில்லை, அவரவர் வளர்ந்த சூழல் வைத்தே பெண்ணியம் தனி மனிதர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது எனும்போது அதை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து அடைக்க முடியாது, உடல் தெரிவது போல் ஆடை அணிவது ஆபாசம் என்று சொல்பவர்களுக்கு எதிராக கருத்துகள் வரும்போது அது தனி மனிதியின் சுயவிருப்பம் என நாம் பேசுவது போன்றே ஒருவர் எழுத்துகளில் என்ன இருக்க வேண்டும் எப்படி எழுத வேண்டும் எனும் கருத்துகள் வரும்போது அது தனி மனிதியின் விருப்பம் என்றே பார்க்க வேண்டும் !!
காமத்தை பெண் பேசுவது ஆண்களின் சுய இன்பத்திற்கு பயன்படும் எனின் அதற்கு எழுதுகின்றவர்கள் என்ன செய்ய முடியும் ?
 காமத்தை முகம் சுளிக்காமல் எழுத வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனெனில் இங்கு காமம் என்ற வார்த்தையே பலருக்கு முகம் சுளிக்க வைக்கும் அதை விட பெண் காமத்தை பற்றி பேசுவதே அருவருப்பாக பார்க்கப்படும் சமூகத்தில் அளவுகளை நாம் நிர்ணயிப்பதில் சிக்கலும் இருக்கிறது

நிற்க, சங்க இலக்கியத்தில் காமம் என்பது காதலை , அன்பை மட்டுமே குறிக்கின்றது , இது இன்றைய தமிழ்ச்சூழலில் முற்றிலும் எப்படி மாறிப்போனது என மொழியியல் அறிஞர்கள் கூறினால் சிறப்பு 😄
இறுதி வரிகளுக்கும் மேலே சொல்லப்பட்ட செய்திக்கும் யாதொரு தொடர்பும் இல்லையே என நினைப்போரும், இல்லை ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என நினைப்போரும் உண்டு, அதே போன்று தான் பெண்ணியமும் அவரவர் வளர்ந்த, புரிந்து கொண்ட சமூக சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்ளப்படுகின்றது!!!

By தோழர் Kanimozhi MV
👆👆👆இதையே நானும் வழிமொழிகிறேன். பெண்கள் ஒட்டுமொத்தமாய் நின்று அடித்தால் மட்டுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நம்மை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமூகத்தை அடி வேரில் அசைத்து ஆட்டம் காண செய்யமுடியும். இதனால் மட்டுமே நான் இயன்ற அளவு பெண் பதிவர்களோடு கருத்தியல் ரீதியாய் எத்தனை முரண்பாடு ஏற்பட்டாலும் பொதுவெளியில் எதிர்க்கவே கூடாது என்னும் கொள்கை வைத்திருப்பது.
#லுலு

கருத்துகள் இல்லை: